சொத்து பரிமாற்றம்

சொத்து பரிமாற்றம் 


சொத்து பரிமாற்ற சட்டம் 1882 பிரிவு 118 படி இரு நபர்கள் பரஸ்பரம் தங்கள் சொத்துக்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

 இப்படி செய்யும் போது எந்த சொத்தின் மதிப்பு அதிகமோ அதற்கு இருவரும் வழக்கமான முறையில் முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

 இந்தக் கட்டணம் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.

 தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முத்திரை தீர்வு கட்டணம் சொத்தின் மதிப்பில் ஏழு சதவீதமாகவும், பதிவு கட்டணம் 4% ஆகவும் உள்ளது.

 சொத்துப்பதிவை தனித்தனியாக மேற்கொள்ள வேண்டும்.

 உதாரணமாக ஒருவரின் சொத்து மதிப்பு ரூபாய் 60 லட்சம் இன்னொருவரின் சொத்து மதிப்பு ரூபாய் 50 லட்சம் எனில் இருவரும் ரூபாய் 60 லட்சத்துக்கு சொத்தினை பதிவு செய்ய வேண்டும்.

 ஒருவர் சென்னையில் இருக்கிறார். இன்னொருவர் பெங்களூரில் இருக்கிறார் என்றால் எந்த சொத்தில் மதிப்பு அதிகமாக இருக்கிறதோ அந்த மாநிலத்தில் பதிவு செய்ய வேண்டும்.

 இப்படி சொத்தை இருவர் பரிமாற்றம் செய்வதால் என்ன லாபம் என்கிறீர்களா?

 இப்படி பரிமாற்றம் செய்யும்போது இந்திய வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 54 ன் படி அதிக மதிப்புள்ள வீட்டை குறைந்த மதிப்புள்ள வீட்டுக்கு மாற்றிக் கொள்பவர் மூலதன ஆதாய வரியை கட்ட வேண்டி இருக்காது.

 அவரின் மூலதன ஆதாய வரியானது ஈடுகட்டப்பட்டுவிடும்.

 அதே நேரத்தில் குறைந்த மதிப்புள்ள வீட்டை அதிக மதிப்புள்ள வீட்டுக்கு மாற்றிக்கொள்பவர் பணவீக்க விகித சரி சட்டங்களுக்கு பிறகு மூலதன ஆதாய வரி கட்ட வேண்டி வரலாம்.
 குடியிருப்பு சொத்தை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட கால மூலதன ஆதாய வரி கட்ட வேண்டி வந்தால் அதை 54 54f 54 ஈசி பிரிவுகளின் கீழ் மூலதன ஆதாய பத்திரத்தில் முதலீடு செய்வதன் மூலம் வரி கட்டுவதை தவிர்க்கலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை