சூட்டை தணிக்கும் நன்னாரி

சூட்டை தணிக்கும் நன்னாரி
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=8dddaee9ff7ff0545f26191d97a737d5

கோடை வந்துவிட்டாலே உடல் சூடு வேர்க்குரு கட்டி என வந்து தொல்லை கொடுக்கும்.

 இதற்கு நன்னாரி சிறந்த தீர்வாக இருக்கும் .

மேலும் உடலுக்கும் பல நன்மைகளை தருகிறது.

 நன்னாரி கொடி வகையை சேர்ந்தது இல்லை.

 நீண்டு ஊசி போல ஒடுங்கி இருக்கும்.

 இலையின் நடுவில் வெண்மை கலந்த பச்சையும், ஓரங்களில் அடர் பச்சை என இரண்டு வகைகளில் உள்ளது .

சுருள் சுருளாக இருந்தால் சீமை நன்னாரி, மாகாளிக் கிழங்கு வேர் தான் நாட்டு நன்னாரி இதை பானங்கள் தயாரிக்கவும், நோயை குணப்படுத்தவும் பயன்படுத்துவர்.

 இதன் வேரை தண்ணீரில் ஊற வைத்து கசாயமாகவோ, சர்பத் ஆகவோ அந்த நல்ல பலன்களை பெறலாம்.

 நன்னாரி பொடியை ஒரு கப் பாலில் ஒரு தேக்கரண்டி கலந்து குடிக்க சிறுநீர் மஞ்சளாக போவது நிற்கும்.

 கசாயத்தை சிறிது பால் சேர்த்து சாப்பிடு வயிற்றுப்போக்கு ,இரும்பல் குணமாகும்.

 வேரை சுட்டு கரியாக்கி பொடித்து, சீரகம் சர்க்கரை சேர்த்து நெய்யில் குழைத்து தினமும் இரண்டு வேளை 10 நாட்கள் சாப்பிட சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு, உடல் சூடு குணமாகும் .

நன்னாரி பசியை தூண்டும் .

சூட்டை தணிக்கும்.

 உடம்பிற்கு குளிர்ச்சியை தரும்.

 இதை வாதம் ,மூட்டு வலி, சிறுநீரகக் கோளாறு, வேர்க்குரு, பேனல் கட்டி, தலைசூடு, தலை வலிக்கு மருந்தாக தீர்வளிக்கிறது.

 நன்னாரி வேரை காய்ச்சி நீரில் பெருங்காயம், நெய் கலந்து குடித்து வந்தால் வாந்தி நிற்கும்.

 பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் அல்சர் வராது.

 பால் அல்லது டீ காய்ச்சி இறக்கியதும் சர்க்கரை போடும்போது நன்னாரி பொடியை ஒரு தேக்கரண்டி சேர்த்து குடிக்க மனமாகவும், சுவையாகவும் இருக்கும்.

 குடிக்கும் பானை தண்ணீரில் நன்னாரி வேரை நன்கு கழுவி விட்டு துளசியுடன் சேர்த்து போட்டு வைக்க தண்ணீர் மணமாக இருப்பதுடன் கோடையின் தாகத்தையும் தீர்க்கும்.

 குளியல் பொடி தயாரிக்கும் போது நன்னாரி வேரை சேர்த்துக் கொள்ள மணமாக இருப்பதுடன் தோல் நோய்கள் வராமல் தடுக்கும்.
 மேலும் உடல் உஷ்ண நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை