சிறுநீர் தொற்று குணமாக எளிய வழிகள்
இன்றைய சூழலில் பெரும்பாலமான பெண்கள் அவ்வப்போது சந்திக்கும் பிரச்சனை என்றால் அது யூரின் இன்பெக்சன் எனும் சிறுநீர் தொற்று ஆகும்.
இதற்கு காரணம் நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பது, தண்ணீர் சரியாக அருந்தாமல் இருப்பது போன்றவையாகும்.
வேலைக்கு போகும் பெண்களே பெரும்பாலும் இந்த தொற்றினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
அதற்கு காரணம் அவர்களுக்கு சரியான கழிவறை வசதி இல்லாததே.
சிறுநீர்த் தொற்றிலிருந்து தற்காலத்துக் கொள்ளும் வழிகள்:
தினசரி காலை ஆறு மணிக்கு எழுந்து கொள்பவர்களாக இருந்தால் காலையிலிருந்து இரண்டு அல்லது மூன்று அரை மணி நேர இடைவெளியில் நான்கு முதல் ஐந்து டம்ளர் தண்ணீர் அருந்தி விட வேண்டும்.
பின்னர் வீட்டிலிருந்து வேலைக்கு கிளம்புவதற்கு முன்பு சிறுநீர் கழித்து விட்டு செல்ல வேண்டும்.
அலுவலகம் சென்ற பிறகு அவ்வப்போது சிறிது சிறிதாக தண்ணீர் அருந்திக் கொள்ள வேண்டும் .
மீண்டும் வீடு திரும்பியதும் சிறுநீர் கழித்துக் கொள்ளலாம் .
இதனால் சிறுநீர் அடுக்கி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.
அடிக்கடி சிறுநீர் தொற்றுக்கு ஆளாகிறவர்கள் வாரத்துக்கு மூன்று நாள் பார்லியை வாங்கி அரை ஸ்பூன் எடுத்து தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு குடித்து வரலாம் .
இது நல்ல தீர்வாக இருக்கும்.
வெளியிடங்களுக்கு செல்லும்போது அல்லது அலுவலகம் , மால், திரையரங்கம் போன்ற இடங்களில் உள்ள பொது கழிவறைகளை பயன்படுத்தும் போது கழிவறையை பயன்படுத்துவதற்கு முன்பு டெட்டால் ஸ்பிரே அடித்து விட்டு ப்ளஸ் அழுத்திய பின்பே பயன்படுத்த வேண்டும்.
டெட்டால் ஸ்பிரே இப்போது கடைகளில் கிடைக்கிறது .
அதை வாங்கி எப்போதும் கையில் வைத்துக் கொள்வது நல்லது.
இதை பயன்படுத்தும் போது சிறுநீர் தொற்று பிரச்சனைகளை தவிர்க்க முடியும் .
விரைவில் படுக்க போவதற்கு முன்பு சிறுநீர் கழித்துவிட்டு திரிபலா பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதனை வாங்கி அந்த பொடியை அரை ஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து அந்த நீரினால் சிறுநீர் கழித்த இடங்களை சுத்தம் செய்து விட்டு படுக்க வேண்டும்.
தொற்றிலிருந்து விடுபடலாம்.
மேலே சொன்ன இது நான்கு வழிமுறைகளையும் தொடர்ந்து கடைபிடித்தால் எவ்வித சிறுநீர் பிரச்சனையும் தொற்றும் இருக்காது.