மன அழுத்தம் போக்கும் நார்ச்சத்து உணவுகள்


தற்போதைய வாழும் முறையில் மன அழுத்தம் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதித்து வருகிறது .

இந்த பிரச்சனைக்கு எளிதான தீர்வாக இருப்பவை நார்ச்சத்து உள்ள உணவுகள்.

எளிதாக செரிக்க கூடிய ,மலச்சிக்கலை ஏற்படுத்தாத உணவு வகைகளை சாப்பிடுவதால் மனதின் அழுத்தம் குறைவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளார்கள்.

உள் உறுப்புகள் சீராக செயல்பட வேண்டுமானால் அதற்குத் தேவையான சக்தியை உணவு மூலமாக பெற வேண்டும்.

நார்ச்சத்து நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம் பெறப்படுகிறது. இது முழுமையாக செரிமானம் ஆவது இல்லை. மாறாக, செரிமானத்தை துரிதப்படுத்தி உடலின் கழிவுகள் எளிதாக வெளியேற உதவுகிறது.

பெண்களுக்கு சராசரியாக ஒரு நாளுக்கு 25 கிராம் நார்சத்து தேவைப்படும்.
இது கரையும் தன்மை கொண்டது மற்றும் கரையாத்தன்மை கொண்டது என இரு வகைப்படும்.

கரையும் தன்மையுடைய நார்ச்சத்துக்கள்

ஓட்ஸ்
 பீன்ஸ் 
வேர்க்கடலை 
அரிசி 
பார்லி 
சாத்துக்குடி 
ஆரஞ்சு 
கோதுமை
 பருப்பு

கரையும் நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.உப்பு ,கொழுப்பு ஆகியவற்றை உறிஞ்சி மலத்துடன் வெளியேற்றுகிறது

நீரழிவு பாதிப்பு உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படுவதால் உடலும் மனமும் சீராக செயல்பட ஏதுவாக அமைகிறது.

கரையாத தன்னை உடைய நார்ச்சத்துக்கள்

பழங்கள்
 காய்கறிகள் 
தானியங்கள் 
ஆப்பிள் 
முட்டைக்கோஸ் 
பீட்ரூட் 
காலிஃப்ளவர் 
கேரட்
இது உணவு நல்ல முறையில் ஜீரணிக்க உதவுவதுடன் மலச்சிக்கலையும் தடுக்கிறது.

கரையாத தன்மை கொண்ட நார்ச்சத்து வயிறு நிரம்பிய திருப்தியை உண்டாக்குகிறது.

நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை வயிற்றில் இருக்கச் செய்வதால் பசியை தூண்டும் இன்சுலின் சுரப்பியை கட்டுப்படுத்தி பசி உணர்வை தடுக்கிறது.



கருத்துரையிடுக

புதியது பழையவை