அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள்?

அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள் தீர்வு இதோ
ஒரு நாளுக்கு சராசரியாக நான்கு முதல் எட்டு முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது. ஆனால் அந்த எண்ணிக்கைக்கு அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழித்துக் கொண்டே இருப்பது உடலில் ஏதோ தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 நிறைய பேர் இதை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்.

 ஆனால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது அபாயகரமான உடல் நலத்தின் அறிகுறியாக கூட இருக்கலாம் .

இதை உதாசீனப்படுத்துவது பின்னாடி எதிர்மறை விளைவுகளை சந்திக்க காரணியாக அமையலாம்.

 பொதுவான காரணங்கள் 

சர்க்கரை நோய், சிறுநீர் பாதை தொற்று, கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் புரோஸ்டேட் பிரச்சனைகள் போன்றவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம்.

 மேலும் சிறுநீரகத் தொற்று, சிறுநீர்ப்பை கற்கள் போன்றவற்றின் காரணமாக கூட இவ்வாறு நிகழலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 இயற்கை தீர்வுகள் 

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருந்தால்  பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

 ஒருவேளை பயப்படும் அளவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனில் நீங்கள் இயற்கை உணவுகளை உண்டு இதற்கு நல்ல தீர்வுகளை காணலாம் .

மாதுளை 

மாதுளையின் தோலை நன்கு விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் சிட்டிகை அளவு விழுதை சில துளி நீர் கலந்து பருக வேண்டும் .

ஒரு நாட்களுக்கு இரு முறை என ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து இதை பருகி வந்தால் சிறுநீர்ப்பை என்றப்பம் குறையும்.

 அடிக்கடி சிறுநீர் களியும் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

 கொள்ளு - 100 கிராம் அளவு கொள்ளை வறுத்துக்கொள்ளவும் .

அதை வெல்லத்துடன் சேர்த்து கலந்து உட்கொண்டு வந்தால் சிறுநீர்ப்பாதை தொற்றுக்கு இது சிறந்த நிவாரணையாக விளங்கும் .

கொள்ளில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும் .

பக்க விளைவுகள் இல்லை.

 இந்த இரண்டு வீட்டு மருத்துவ முறையும் பக்க விளைவுகள் அற்றவை.
 மேலும் இதை நீங்கள் மிக சுலபமாக வீட்டிலேயே தயாரிக்கலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை