வரட்டு இருமலை தடுப்பது எப்படி?

வரட்டு இருமலை தடுப்பது எப்படி?

பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் மற்றும் அரை டீஸ்பூன் தேனை கலந்து பருகினால் வறட்டு இருமலை தடுக்கலாம்.

 ஒரு டீஸ்பூன் பெரிய சீரகம், அரை பட்டை மற்றும் ஒரு டீஸ்பூன் இஞ்சித்தூளை நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து ஆறிய உடன் பருகவும் .
வறட்டு இருமலுக்கு இதமாக இருக்கும்.

 வெங்காயத்தை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் நாளடைவில் பறந்து போய்விடும்.

 தேனில் உள்ள இருமலை குணப்படுத்தும் பண்புகள் வறட்டு இருமல் பிரச்சனையிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.

 அத்தகைய தேனை ஐந்து டேபிள் ஸ்பூன் எடுத்து அதனுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து இரண்டு நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைத்து சாப்பிட வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

 கற்றாழையில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் .

இதில் உள்ள வலி நிவாரண பண்புகள் தொண்டை சுவரில் இருக்கும் பாதிக்கப்பட்ட திசுக்களை சரி செய்யும்.

 அதிலும் கற்றாழை ஜெல் ஜூஸில் தேன் கலந்து தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால் வறட்டு இருமல் நீங்குவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும் .

யூகலிப்ட்ஸ் எண்ணையில் உள்ள ஆன்ட்டி பாக்டரியல் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும் .
அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த சுடுநீரை நிரப்பி அதில் சில துளிகள் யூகலிடிப்ஸ் ஆயில் சேர்த்து கலந்து 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும் .இப்படி சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால் வறட்டு இருமலை தடுக்கலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை