துணிகளில் ஈர வாடையா ? கவலை வேண்டாம்

துணிகளில் ஈர வாடையா ? கவலை வேண்டாம்



 மழை , குளிர் காலத்தில் எங்கும் பனி மற்றும் மழை நீரால் ஈரம் துவைத்த துணி எல்லாம் காயாமல் வீட்டுக்குள்ளேயே காற்றாட விடும் நிலைமை .

இதனால் துணிகளில் ஈர வாடை சங்கடமான நிலை உண்டாகிறதா? இதை போக்க ஏதோ எளிய டிப்ஸ்:

 உப்பு 

கடல் உப்பு அல்லது கல் உப்பை ஒரு பிடி எடுத்து மெல்லிய துணியில் கட்டி அறையில் ஒரு ஓரத்தில் தொங்கவோ அல்லது ஒரு தட்டில் வைத்து விடுங்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உப்பை மாற்றி புது உப்பை வையுங்கள்.

 இது காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும். வாடை மறையும்.

 வெள்ளை வினிகர்

ஒரு பாத்திரத்தில் வெள்ளை வினிகரை ஊற்றி அறையில் ஒரு ஓரத்தில் வையுங்கள்.

 மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே விட்டுவிடுங்கள்.

 சிறிது நேரத்தில் ஈர வாடை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

 கற்பூரம் 

அறையில், ஜன்னல்களில் சாத்திவிட்டு ஒரு பாத்திரத்தில் கற்பூரம் வைத்து ஏற்றி கதவு மற்றும் ஜன்னல்களை மூடி சிறிது நேரம் விட்டு விடவும்.

 இப்படி செய்தால் அறையில் இருக்கும் புஞ்சை வாடை, ஈர வாடை மாயமாய் மறைந்துவிடும் .

வேப்பிலை

தண்டுடனான வேப்பிலை கொத்தை எடுத்து துணிகள் வைக்கும் அலமாரியில் வையுங்கள்.

 இது துணிகளில் பூஞ்சை பிடிக்காமல் தடுக்கும்.

 இதனால் துணிகளில் கெட்ட வாடை போய்விடும்.

 பேப்ரிக் கண்டிஷனர் 

துவைக்கும் போது வெந்நீரில் ஊறவைத்து கசக்கலாம் .

துணிகளுக்கு பயன்படுத்தும் பேப்ரிக் கண்டிஷனர் போன்றவற்றை பயன்படுத்தலாம் .

ஒரே நேரத்தில் அதிக துணிகளை துவைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக துவைத்து மின்விசிறிக்கு கீழ் உணர்த்தலாம்.

 அயன் பாக்ஸ் 

இந்த செயலை அவசரத்திற்கு பயன்படுத்தலாம்.

 அயர்ன் பாக்ஸை நன்கு சூடேற்றிவிட்டு மின் இணைப்பை துண்டித்து விடவும்.

 பின்னர் துணிகளில் தைக்க ஈரவாடை நீங்கும் .

ஏசி அறை

பெரும்பாலும் ஏசி இருக்கும் அறையில் ஈரப்பதம் குறைவாக இருக்கும்.
 இந்த அறையில் மின்விசிறிக்கு கீழ் துணிகளை உலர விடலாம். ஆனால் ஈரத்துணிகள் இருக்கும் போது ஏசி பயன்பாட்டை தவிர்க்கவும்

கருத்துரையிடுக

புதியது பழையவை