1.கோபத்தின் உச்சத்தில் இருக்கும்போதே அவசரப்பட்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருங்கள்.
2.ஒரு விஷயத்தைப் பற்றி முழு தகவல்கள் உங்களுக்கு தெரியாத போது அதை பற்றி பேசாமல் அமைதியாக இருந்து விடுங்கள்.
3. யாரோ சொல்லும் ஒரு விஷயத்தை உங்களால் உறுதி செய்ய முடியாதபோது, அதை பற்றி எதுவும் சொல்லாமல் அமைதி காத்திடுங்கள்.
4. உங்களைவிட கீழான நிலையில் உள்ள உங்களைவிட பலவீனமான ஒருவரை நீங்கள் சொல்லும் வார்த்தைகள் பாதிக்கும் என்றால் அங்கு பேசாதீர்கள்.
5. அடுத்தவர் சொல்லை கேட்க வேண்டியிருக்கும் சூழலில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விடுங்கள்.
6. அடுத்தவர்களின் விமர்சனங்கள் உங்கள் மனதை பாதிக்கும் போது எதுவும் சொல்லாமல் அமைதி காத்திடுங்கள்.
7.புனிதமாக மற்றவர் கருதும் விஷயங்கள் பற்றி கேலியாக பேசத் தோன்றும் போது வாயை திறக்காமல் அமைதியாக இருங்கள்.
8. பாவ செயல்களைப் பற்றி கிண்டலாக எதுவும் சொல்லத் தோன்றினாள் அதை சொல்லாமல் வாயை மூடிக்கொள்ளுங்கள்.
9. ஏற்கனவே ஒரு முறைக்கு மேல் சொன்ன விஷயங்களை திரும்ப பேச தோன்றும்போது அமைதி காத்திடுங்கள்.
10.மோசமான ஒரு மனிதரை புகழ்ந்து பேச ஆசைப்படும் சூழலில் வாயை மூடிக்கொள்ளுங்கள்.
11.உங்கள் குடும்பத்தை பற்றியோ? நண்பர்களைப் பற்றியோ? உறவுகளைப் பற்றியோ? தவறாக பேச வேண்டிய சூழல் ஏற்பட்டால் அமைதியை நாடுங்கள்.
12. நீங்கள் சொல்லும் வார்த்தைகளுக்காக பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்கும் என்று தோன்றினால் அமைதியாக இருங்கள்.
18. உங்கள் வார்த்தைகள் உங்களைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் என்றால் அமைதியாக இருந்து விடுங்கள்.
19. உங்களுக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவதை விட பேசாமல் இருப்பது உத்தமம்.
20. நீங்கள் சொல்லப்போவது முழு பொய் என்று தெரிந்தால் அதை சொல்லாமலே விட்டுவிடுங்கள்.