பறவை இனத்திலேயே கழுகுக்கு மட்டும் ஆயுட்காலம் அதிகம்.கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் வாழக்கூடியவை.
ஆனால்,இந்த 70 ஆண்டுகள் உயிர் வாழ,கழுகு ஒரு கடினமான முடிவை எடுக்க வேண்டும்.
தன்னுடைய 40வது அகவையில், கழுகின் சக்தி மிகுந்த கால்கள் மற்றும் நகங்கள் இரையை பிடிக்கும் வலுவை இழந்து விடும்.கூர்மையான அலகுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளைந்துவிடும். வயது முதிர்ச்சியின் காரணமானாக இறக்கைகள் வலு கூடி,மார்போடு ஒட்டிக்கொண்டு பார்ப்பதற்கே கடினமாகிவிடும்.
இப்பொழுது கழுகுக்கு இரண்டே இரண்டு வழிகள் மட்டுமே.ஒன்று இறப்பது அல்லது அந்த கடினமான முடிவை எடுத்து மீண்டும் உயிர் வாழ்வது.
அந்த கடினமான பாதையை தேர்ந்தேடுத்த கழுகு, முதலில் ஒரு உயரமான மலையின் மீது கூடு கட்டும்.கூடு கட்டியவுடன் ,தன் அலகை பாறையின் மீது மோதி, உடையும் வரை முட்டும்.அலகு முற்றிலுமாக உடைந்து புது அலகு முளைக்கும் வரை கூட்டிலேயே இருக்கும்
புது அலகு முளைத்தவுடன் தன் கால் நகங்களை ஒவ்வொன்றாக பிய்த்து எடுக்கும்.புது நகங்கள் முளைத்தவுடன் ,தன் இறக்கைகளை பிய்த்து எறியும்.5 மாதங்கள் கழித்து,மறுபிறவி எடுத்த கழுகு ,30 ஆண்டுகள் கம்பீரமாக வாழும்.
இது கழுகுக்கு மட்டும் அல்ல ,இப்பிரபஞ்சத்தில் வாழும் அனைத்து உயிரினத்துக்கும் இது பொருந்தும்.
நம் எல்லோருக்கும் தோல்வி மிக மிக அவசியம்.வாழ்க்கையின் மகத்தான பாடங்கள் நீங்கள் வாழ்க்கையில் கீழே விழுந்தால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்.
கீழே விழுந்தால் அதை சாபமாக பார்க்காமல் வரமாக பார்த்தால்,நாம் மறுபடியும் எழுந்து நிற்க அதுவே ஒரு உந்து சக்தியாக இருக்கும்.
நடக்க ஆரம்பிக்கும் குழந்தை அடிக்கடி கீழே விழுவது இயல்பு.கீழே விழுந்த குழந்தை முதலில் அழுவும்.சிறிது நேரத்தில் அழுது முடித்து ,அக்குழந்தை தானாக எழுந்து நின்று,ஒரு சிரிப்பு சிரிக்கும் பாருங்கள்.
நாமும் அக்குழந்தையாக மாறுவோம்,வாழ்க்கையில் விழும்போது...........