இடுப்பு வலி முதுகு வலி நீங்க

இடுப்பு வலி முதுகு வலி நீங்க
 இருக்கையில் அமரும்போது நிமிர்ந்து அமர வேண்டும் .

படுக்கும் போதே பெரிய தலையணையை தவிர்க்கவும்.

 குழந்தைகளுக்கு பயன்படுத்துவது போன்ற மெலிதான, தட்டையான தலையணை சிறந்தது .

குப்புற படுத்தல் கூடாது .

தேங்காய் நார் மெத்தையே உகந்தது .

மெத்தையின் கீழே ஸ்ப்ரிங் கட்டில் ஆகாது.

 நடை பயிற்சி முக்கியம்.

 நின்றல், நடத்தல், அமர்தல் என்று எதுவுமே நீண்ட நேரம் கூடாது .

பயிற்சிக்காகவோ, பஸ் வரவில்லை என்றோ நீண்ட தூரம் நடத்தலை தவிருங்கள்.

 நண்பர்களோடு அரட்டை அடித்தபடி வெகு நேரம் நிற்காதீர்கள்.

 தியேட்டரில், வீட்டிலோ முழு படம் பார்த்துவிட்டு தான் எழுவேன் என்று அடம்பிடிக்காதீர்கள்.

 இடை இடையே ஓய்வு எடுத்து பின்னர் தொடருங்கள்.

 அவசரப்படாமல் பொறுமையாக நிதானமாக எதையும் செய்யுங்கள்.
 குனிதல், எழுந்து கொள்ளல், கை கால் அசைத்தல் யாவுமே நிதானமாக செய்வது அவசியம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை