எண்ணெய் விடுதல்
வாயு கோளாறுகள் இருந்தால் பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவினால் உடனடியாக பலன் தரும்.
அதுபோல் இரவில் நெய் அல்லது தேங்காய் எண்ணெயை மூன்று சொட்டு விட்டால் தொப்புளை சுற்றி பிடித்து நீவி விடுவதால் கண் வலி, சரும வறட்சி குணமாகும்.
விளக்கெண்ணை மூன்று சொட்டு விட்டு தொப்புளை சுற்றி நீவி விடுவதால் முழங்கால் வலி , மூட்டு வலி, கால் வலி குணமாகும்.
வேப்பெண்ணையை தொப்புளில் வைத்தால் சரும நோய்களும், தொற்றுகளும் குறையும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் .நச்சுக்கள் அழியும்.
ஆலிவ் எண்ணெய் தடவி நீவி அமுக்கிவிட்டால் பெண்கள் மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும் .
கண் பார்வை தெளிவடைய, உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பு குணமாக , சருமம் பளபளப்பாக வறட்சி மறைய , தலைமுடி ஆரோக்கியமாக வளர, முழங்கால் மூட்டு வலி, கால் குடைச்சல், நரம்பு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தொப்புளில் எண்ணெய் விடுவதால் வலிகள் பாதிப்புகள் குறையும் .
நரம்பு பாதிப்பு சரியாவதால் ரத்தம் சிறப்பாக பாய்ந்து உடல் உறுப்புகள் ஆரோக்கியமா ஆகிறது.