சிறுநீர் கசிவு

சிறுநீர் கசிவு
30 முதல் 60% பெண்கள் வாழ்வில் ஒரு முறையேனும் இந்த பாதிப்பால் அவதி படுகிறார்கள்.

  நீண்ட நாட்களாக இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுநீர் தொற்று, தொடைகளில் தடிப்புகள், மன அழுத்தம், இரவில் அவசரமாக இருட்டில் ஓடுவதால் கீழே விழுந்து ஏற்படும் காயங்கள் என விளைவுகள் உண்டாகலாம் .

சிலவகை உணவுகள் மருந்துகள் எடுத்துக் கொண்டால் அவசரமாகவும், அடிக்கடியும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும்.

 உதாரணமாக அதிக இனிப்பு, காரம் மிக்க உணவுகள் ,வைட்டமின் சி அதிகமாக எடுத்துக் கொள்வது, சாக்லேட் ,மது போன்றவை எடுத்துக் கொள்வது .

இதனால் பயப்பட வேண்டாம் .

அடுத்த நாட்களில் சரியாகிவிடும்.

 இரும்மும் பொழுது ஏற்படுகிறதா?

 அவசரமாக போக வேண்டும் என்று எண்ணம் தோன்றிய உடனேயே கசிகிறதா ? அடிக்கடி சிறுநீர் போக வேண்டும் போல் உள்ளதா?

 பகலில் எத்தனை முறையும் ,இரைவில் எத்தனை முறையும் சிறுநீர் கழிக்கிறோம்.

 ஒவ்வொரு முறையும் எவ்வளவு சிறுநீர் கழிக்கிறோம்.

 இரவு தூக்கம் எப்படி உள்ளது.

 சிறுநீர் கழிக்க வேண்டிய சூழ்நிலையினால் தூக்கம் கலைகின்றதா? என்று நமக்கு நாமே ஆராய்ந்து பட்டியல் போட்டுக் கொள்வது சிறந்தது.

 ஆகவே இது ஏதோ வெளியில் சொல்லக்கூடாத பிரச்சனை என கருதி பாதிப்பின் வீரியத்தை பெரிது படுத்தாமல் வீட்டில் உள்ளவர்களிடம் கலந்து உரையாடி சரியான மருத்துவ முறைகளை தேர்ந்தெடுப்போம்.

 பின்பற்றுவோம்.
 எல்லாம் எளிதில் சரியாகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை