துர்நாற்றமா...? யாருடா அது?


உடல் துர்நாற்றத்தை விரட்டும் ஆறு உணவு பொருட்கள்:

நீங்கள் வெளியில் செல்லும் பாெழுது உங்கள் உடலின் துர்நாற்றத்தால் எல்லோரும் உங்களிடமிருந்து விலகி செல்கிறார்கள் என்றால், உங்களுக்கு எவ்வளவு அவமானமாக இருக்கும் என எண்ணிப் பாருங்கள்.

 இது உங்கள் பர்சனாலிட்டியை பாதிப்பதுடன், தன்னம்பிக்கையும் குறைத்து விடும்.

 இதை போக்க சில உணவு வகைகளை சாப்பிட வேண்டும் . 

நீரே மருந்து
நாம் சரியான உணவை சாப்பிடவில்லை என்றால் நம் சிறுநீர் நிறம் மாறுவதுடன் துர்நாற்றமும் வீசும்.

 இதை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் ஆடைகளிலும் துர்நாற்றம் பரவும். 

அதனால் தினமும் அரை மணிக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும்.


 நாம் ஜங்க் ஃபுட் அதிகம் எடுத்துக் கொண்டால் அதனால் வியர்வை மூலம் வெளிப்படும் விஷப் பொருட்கள் துர்மாற்றம் அளிக்கும்.

 இதனால் ஃபேட்டிலிவரும் ஏற்படலாம்.

 உணவை சரியாக மென்று சாப்பிடவில்லை என்றால் குடலில் கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகி துர்நாற்றம் ஏற்படும்.

 அதனால் இரண்டு மூன்று மணிக்கு ஒரு முறை ஹெல்த்தியாக ஏதாவது சாப்பிட்டு உடலில் திரவ நிலையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.
 கிரின் டீ

 கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது. இது உடலை துர்நாற்றத்தில் இருந்து காக்கிறது.

 வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது,

 அதனால் காலையில் முதலில் கிரீன் டீ அருந்தவும்.


 எலுமிச்சை 

எலுமிச்சையில் ஆன்டி பட்டியில் குணம் இருப்பதால் உடல் துர்நாற்றத்தை நீக்குகிறது.

 எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

 இதனால் உங்கள் சிஸ்டத்தை இம்ப்ரூவ் செய்ய காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு போட்டு குடிக்கவும்.

 தக்காளி 

இதில் ஆண்டி பாக்டீரியல் மற்றும் ஆண்டி செப்டிக் குணங்கள் இருப்பதால் உடல் துர்நாற்றம் வீச காரணமான பாக்டீரியாவை அழிக்கிறது.

 இதில் நேச்சுரல் ஆஸ்ட்ரின்ஜன்ட் இருப்பதால் முகத்தில் வியர்வை ஏற்படாமல் தடுக்கிறது 10 - 15 நிமிடம் தக்காளியை முகத்தில் தடவி அப்படியே விட்டு 15 நிமிடம் கழித்து முகம் கழுவினால் வியர்வை தொடர்பான பிரச்சனை நீங்கும்.

 தயிர் 

இது உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.

 எளிதாக உடலில் இருந்து விஷப் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் தவறாமல் மோர் அல்லது தயிரை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
ஏலக்காய் 

உங்கள் உடலில் மணம் வீச உணவில் ஒன்று இரண்டு ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும்.

 இதில் கெட்ட பாக்டீரியாக்களை உடலில் இருந்து வெளியேற்றும் சக்தி உள்ளது.

 இஞ்சி 
இது உங்கள் உடல் துர்நாற்றத்தை நீக்கி புத்துணர்ச்சி ஊட்டுகிறது உடலில் உள்ள விஷ பொருட்களை வெளியேற்றுகிறது,

சோப்பு

தினமும் ஆன்டி பாக்டரியல் சோப்பை குளியலுக்கு பயன்படுத்தவும்.

 வெளியிலிருந்து வந்ததும் கை கால் முகம் கழுவவும் இல்லை என்றால் வியர்வியால் துர்நாற்றம் ஏற்படும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை