மருதாணி இப்படி வச்சா ஒரு மாதம் ஆனா கூட நிறம் மாறாது
மருந்தாணி இட்டுக் கொள்வது என்பது வெறும் அழகிற்காக மட்டும் செய்வது அல்ல மருந்தாணி போடுவதே ஒரு தனி கலைதான்.
மருந்தாணியின் பயன்கள்
மருந்தாணி நம் உடம்பில் உள்ள சூட்டை தணித்து, நம் உடலை குளுமைப்படுத்தும் ஒரு நல்ல மருந்து.
அதை போல் மருந்தாணியை அரைத்து தீ காயம் பட்ட இடங்களில் தேய்த்து விடலாம்.
தலைமுடி பிரச்சனைக்கும் ஒரு நல்ல தீர்வு கொடுக்கும் சக்தி இந்த மருதாணிக்கு உண்டு.
அனைத்தையும் விட பெண்கள் இந்த மருந்தாணியை வைப்பதன் மூலம் அவர்களின் மன அழுத்தம் பெருமளவு குறையும்.
மருதாணி நிகழ்வு
மருதாணி வைப்பதை ஒரு விசேஷமாகவே கொண்டாடும் அளவிற்கு இந்த மருந்தாணி நம் பாரம்பரியத்தில் ஒன்றாக திகழ்கிறது.
முன்பெல்லாம் நம் வீடுகளில் ஏதாவது விசேஷம் என்றால் முதலில் பெண்களுக்கு தோன்றுவது மருந்தாணி.
மருதாணி இலையை பறித்து அதை அரைத்து கைகளில் வைப்பது தான் நம் பாரம்பரிய வழக்கம்.
இப்படி அரைத்து வைக்கும் இந்த மருந்தாணி எல்லோருக்கும் ஒரே மாதிரியாக நிறத்தை கொடுப்பதில்லை.
சிலருக்கு நல்ல கருஞ்சவப்பாகவும், சிலருக்கு இளஞ்சிவப்பாகவும், ஏன் ஒரு சிலருக்கு கரும்பச்சை நிறத்தில் கூட, மாறிவிடும்.
மருந்தாணி என்பது வைத்தவுடன் கை சிவந்து இருந்தால் மட்டுமே அதை பார்க்க அழகாக இருக்கும் அதற்காக சில வழிமுறைகள்:
முதலில் மருதாணியை எப்படி பறிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
முதலில் மருதாணி அரைக்க நல்ல கொழுந்து இலைகளாக பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்பொழுதுதான் நிறம் நன்றாக இருக்கும்.
முற்றிய இலைகள் அத்தனை நிறத்தை கொடுக்காது..
அதேபோல அரைக்கும் முன்பு அதில் உள்ள காம்பு போன்றவை அனைத்தும் சுத்தமாக எடுத்த பிறகுதான் அரைக்க வேண்டும்.
இல்லை எனில் மருந்தாணியில் திப்பி திப்பியாக தங்கி கையில் வைக்கும் போது ஆங்காங்கே இந்த திப்பி உள்ள இடங்களில் மருதாணி பிடிக்காமல் பார்க்க நன்றாக இருக்காது.
அதேபோல மருதாணி இலைகளை கொஞ்சமாக போட்டு சிறிது நேரம் அரைத்த பிறகு மீதி இலைகளை போட்டு அரைத்தால் இலைகள் அனைத்தும் நன்றாக அரைபட்டு வைக்க சுலபமாக இருக்கும்.