கோடையில் செய்ய வேண்டும் ஏசி பராமரிப்பு

கோடையில் செய்ய வேண்டும் ஏசி பராமரிப்பு 
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=8dddaee9ff7ff0545f26191d97a737d5

ஏசியின் உயர் மின் அழுத்தத்தை தாங்க கூடிய அளவுக்கு கேபிள் சுவிட்ச் போன்றவற்றை தரமானதாக வாங்க வேண்டும் .

ஸ்டெபிலைசரையும் உயர்தரமாக பார்த்து வாங்க வேண்டும் .

ஏசியை பயன்படுத்தும் அறையில் சூரிய ஒளி நேரடியாக படாமல் இருப்பது நல்லது.

 பகல் முழுக்க சூடேறி இருக்கும் சுவர்கள் விரைவில் குளிர அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் .

அது மாதிரி இருந்தால் திரைசீலைகளை ஜன்னலில் போட்டு மூடவும்.

 மொட்டை மாடியில் சூடு ஏசி அறையின் கூரையில் நீண்ட நேரம் இருக்கும்.

 அதனால் அறை குளிர்ச்சி அடைய நேரம் ஆகும்.

 இது தவிர்க்க ஃபால்ஸ் சீலிங் அமைக்கலாம்.

 அதனால் அரையின் பரப்பும் குறைவதால் சீக்கிரம் குளிர்ச்சியாகும்.

 அறையின் அளவுக்கு ஏற்ற திறன் கொண்ட ஏசி பயன்படுத்தவும் .

பெரிய அறையாக இருந்தால் குறைந்த செயல்திறன் கொண்ட ஏசியை பயன்படுத்தக் கூடாது .

கோடை வெயில் வருவதற்கு முன்பு பயன்படுத்தாமல் இருந்த ஏசிகளின் வெளிப்புறத்தில் பறவைகள் அல்லது அணில்கள் கட்டிய கூடுகள் இருந்தால் அவற்றை சுத்தப்படுத்துங்கள்.

 ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஏசியை சர்வீஸ் செய்ய வேண்டும்.

 அனுபவம் மிக்க கம்பெனி மெக்கானிக்கைகளைக் கொண்டு அதை செய்ய வேண்டும்.

 ஏசியின் உட்புறம் சுத்தமாக இருப்பது போலவே அறையின் வெளிப்புறமும் அது சுத்தமாக இருக்க வேண்டும்.

 ஏசி சரியான கண்டிஷனில் இருக்கிறதா என்பதையும் ஃபேன், மாேட்டார்கள், பெல்ட், கேஸ் அளவு சரியாக உள்ளனவா என்பதையும் கோடைக்கு முன்னரே பார்த்து சரி செய்து கொள்வது அவசியம்.

 பில்டரை கழற்றி சுத்தம் செய்தால் தூசுகள் நீங்கி நன்றாக இருக்கும்.

 தூய்மையான காற்றையும் அது தரும்.

 ஏசியில் வெப்பம் உருவாகாமலும், இருக்கும் ஏசியில் இருந்து தண்ணீர் வெளியேறும் குழாயில் ஏதும் அடைப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

 அதில் அடைப்பு இருந்தாலும் அறை சீக்கிரம் குளிராது .

அறையில் ஏசி பொருந்தியுள்ள இடத்தின் இணைப்புகளில் கசிவு இருக்கிறதா? என்று பார்க்கவும்.

 அதேபோல் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் இடைவெளிகள் இருந்தாலும் சரி செய்யவும்.

 ஏசிகளின் நீண்ட ஆயுளுக்கு விரைவில் அரை மணி நேரம் நல்ல குளிர்ச்சியில் வைத்துவிட்டு அதன் பின் 24 டிகிரி செல்சியஸ் வைத்து பயன்படுத்தலாம்.

 ஏசி பயன்படுத்தும் போது கூடியவரை பேனை ஓட விடக்கூடாது .

ஃபேன் ஓடினால் அறையில் இருக்கும் தூசுகள் ஏசியின் உள்ளே சென்று விடும்.

 ஏசி இயங்கும்போது நறுமணம் கவிழும் வாசனை திரவங்களை பயன்படுத்தக் கூடாது.

 பயன்படுத்தினால் காயில் பழுதாகும்.

 ஏ.சி பயன்படுத்தும் அறையில் அதிக பொருட்களை வைக்கக் கூடாது .
அப்படி வைத்தால் அந்த பொருட்களின் மீது படிந்து குளிர்ச்சி குறையும் .

மின் செலவும் அதிகமாகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை