குளு குளு கோடை
சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக சில டிப்ஸ்கள் இதோ:
கோடை வறட்சியினால் உடலில் உள்ள நீர் வியர்வையாக அதிகம் வெளியேறுவதால் அதிக அளவு நீர் பருக வேண்டும் .
எலுமிச்சை சாறு, மோரில் சிறிது உப்பு சேர்த்து அருந்தினால் மிகவும் நல்லது.
கோடைகாலத்தில் பருத்தி ஆடைகளோ அல்லது அடர்த்தியான நிறமாக இல்லாமல் இளம் நிறம் அல்லது வெண்மை நிறம் நல்லது .
ஐஸ் வாட்டர் அல்லது குளிர்ந்த நீரில் சில துளி பன்னீர் விட்டு அதை மெல்லிய துணி அல்லது பஞ்சை நினைத்து நெற்றி, கண்ணம், கண் இமைகளை ஒத்தி எடுத்தால் களைப்பு இருக்காது. முகம் வெயிலில் கருக்காது.
வெயிலில் போய் வந்ததும் ஒரு பக்கெட் தண்ணீர் நிரப்பி கால்களை 10 நிமிடம் வைத்திருந்தால் நல்லது. இதனால் உடல் உசினம் தணியும். நல்ல தூக்கம் வரும்.
வெயிலில் போய்விட்டு வந்தவுடன் குளிர்ந்த பானங்களை குடிக்கக்கூடாது. வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு குளிர்பானங்கள் குடிக்கலாம்.
மண்பானை தண்ணீரில் சிறிது அளவு வெட்டிவேர், சீரகம், கொத்தமல்லி சிறிது ஏலப்பொடி இதை ஒரு துணியில் கட்டிப்போட்டு வைத்து அந்த தண்ணீரை குடித்தால் மிகவும் சுவையாகவும், குளிர்ச்சியாகவும், மணமாகவும் இருக்கும் .
ஜீன்ஸ், டீ சர்ட் அணிவதை தவிர்க்க வேண்டும் .
பருத்தியில்லாத உள்ளாடைகள் மிகவும் சிறந்தது.
இரவு வெந்தயம், பச்சை பயிர் இரண்டையும் நீரில் ஊற வைத்து காலையில் அரைத்து தலையில் அரை மணி நேரம் ஊற வைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் தலை சூடு நீங்கும். தலைமுடி உதிராது. கண் குளிர்ச்சியாகும் .
உணவில் வெள்ளரி, தக்காளி, கீரை வகைகள் மிகவும் நல்லது.
வெள்ளரியை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மோர் விட்டு கொத்தமல்லி ,இஞ்சி, புதினா போட்டு உச்சி வெயிலில் இரண்டு கப் குடித்தால் உடல் சூடு குறைந்து ஜில்லென்று இருக்கும்.
பழைய சாதம் நீருடன் சிறிது மோர், உப்பு சேர்த்து சின்ன வெங்காயம், வெள்ளரி துருவி போட்டு ஜில்லென்று சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.
இளநீர் மிகவும் நல்லது. காபி டீ குளிர்பானங்களை குறைத்து இளநீர், மோர் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.