பெண்களே! கண்டறியுங்கள் ஒளிந்துள்ள கேமராக்களை

பெண்களே! கண்டறியுங்கள் ஒளிந்துள்ள கேமராக்களை
 உலகில் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான்.

 ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு புள்ளி விபரங்களை குறிப்பாக ஒரு மணி நேரத்திற்குள் எத்தனை பெண்கள் தாக்கப்படுகின்றார்கள் என்று அள்ளி வீசுகின்றன.

 தாக்குதல்களை சமாளிப்பது, அவற்றை தவிர்க்கும் வண்ணம் தன்னை எப்படி நடத்திக் கொண்டு செல்வது, எந்த எண்களை தங்கள் மொபைலில் மொபைலில் வைத்துக் கொள்வது, தனியாக செல்லாமல் தவிர்ப்பது, எந்த ஏரியா பாதுகாப்பற்றது போன்ற தகவல்களை நன்கு அறிந்து பெண்கள் சாதிக்கின்றார்கள் .

இன்று பெண்களுக்கு கண்களுக்கு புலப்படாத எதிரிகளுக்கு உள்ளானவர்கள் இவை பின் ஹோல் கேமரா (Pinhole Camera) .

இது ஊடுருவாத இடங்கள் இல்லை.

 படுக்கை அறைகள், பெரிய கடைகளில் வாங்க வேண்டிய உடைகளை போட்டு பார்க்கும் இடங்கள், குளியலறைகள் என்று எங்கும் பயணிக்கின்றன.

 இந்த கேமராக்கள் இத்தகைய கிரிமினல்களுக்கு பணம் கொட்டும் மிஷின்களாக மாறுகின்றன.

 இதன் தாக்கம் ஆண்களையும் தாக்குகிறது என்றாலும் பெண்களுக்கு மன ரீதியான தாக்கம் மிக அதிகம்.

 உடைகள் மாற்றும் அறைகள், ஹோட்டல் அறைகள், வீடுகளில் மாட்டபட்டு இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடிகளில் உண்மையான முகம் பார்க்கும் கண்ணாடியா? அல்லது இரண்டு புறமும் பார்க்கக்கூடிய கண்ணாடியா? என்று அறிந்து கொள்வது கடினம்.

 அதாவது அவர்கள் உங்களை பார்க்கின்றார்கள் என்பது கண்ணாடி முன் நிற்பதற்கு தெரியாது.

 பல கிரிமினல் வழக்குகள் இதை சார்ந்து இன்று அதிக வெளிச்சம் அளிக்கப்பட்டாமல் தீர்க்கப்படுவது உண்மைதான்.

 கவலை அளிக்கக்கூடிய இந்த மோசமான செயலை எப்படி கண்டுபிடிப்பது? இதற்கென்று உலக அளவில் சில எளிமையான விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று பெண்களுக்கு கூறப்படுகிறது.

 ஒரு பெண் தன் கைவிரல் நகத்தை கண்ணாடி முன்வைத்து பார்த்தால் தன் கை நகர்த்திற்கும் கண்ணாடியில் உள்ள பிம்பத்திற்கும் இடையே ஒரு சின்ன விலகல் (Gap) இருந்தால் அது சரியான கண்ணாடி.

 அதே சமயம் உங்கள் நகம் தன் பிம்பத்தை நேரடியாக தொட்டால் அது பிரச்சனைக்குரிய இரண்டு பக்கமும் காணப்படும் கண்ணாடி.

 இது அடிப்படை டெஸ்ட் தான்.

 இது எளிமையான தீர்வு தான் என்றாலும் இதன் அடிப்படை விஞ்ஞானத்தை புரிந்து கொள்வது எளிது சாதாரண கண்ணாடியில் பூசப்படும் பாதரச வெள்ளி முலாம் கண்ணாடிக்கு பின்புறம் முழுவதுமாக பூசப்படுவதால் நம் நகத்திர்க்கும் கண்ணாடியின் பிம்பத்திற்கும் இடையே சிறிய இடைவெளி இருக்கும்.

 அதே சமயம் இரண்டு புறமும் பார்க்கும் கண்ணாடியில் முலாம் கண்ணாடியின் மீது பூசப்படுகிறது.

 இதனால் இடைவெளி இருக்காது.

 ஒளித்து வைக்கப்படும் கேமராவை கண்டுபிடிப்பதற்கு உலக அளவில் மிக எளிமையான வகையில் பெண்கள் ஒரு செயலை செய்கிறார்கள்.

 உடைகள் மாற்றும் அறையில் மொபைல் எடுத்துச் சென்று அங்கிருந்து அழைக்க முற்பட வேண்டும்.

 மொபைலில் கால் எடுக்கவில்லை என்றால் உள்ளே கேமரா எங்கேயோ ஒளிந்து வைக்கப்பட்டுள்ளது.

 ஃபைபர் ஆப்டிக் கேபிள் (Fibre optic Cable) இருப்பதால் சிக்னல் எடுக்க இயலாமல் தடுக்கும் என்பதுதான் இதன் எளிமையான விஞ்ஞானம்.
 இன்று சாதித்துக் கொண்டிருக்கும் பெண்கள் தடையின்றி முன்னேற இப்படி சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை