சப்போட்டா நமக்கு சப்போட்டுதான்

சப்போட்டா

 சப்போட்டா பழத்தில் உள்ள சில சத்துப் பொருட்களும் வைட்டமின்களும் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுத்து சீராக வைக்கும் குணம் கொண்டவை.

 கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு சப்போர்ட்டா இயற்கை மருந்தாகும்.

 இதயம் சம்பந்தமான கோளாறுகளை மட்டுப்படுத்தும் சக்தி சப்போட்டாவுக்கு உண்டு.

 உடலில் நீர் சத்து குறைவாக இருக்கும் நேரத்தில் இந்த பழத்தை சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 கலோரிகள் நிறைந்த சப்போட்டா பழம் ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.


இப்பழம் சிறுநீரகம் தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

 சிறுநீரக கல் இருப்பவர்கள் சப்போட்டாவை அடிக்கடி சாப்பிடலாம்.

 சப்போட்டா பழச்சாறுடன் டீ கசாயத்தை சேர்த்து பருகினால் ரத்த பேதி குணமாகும்.

 சப்போட்டா பழச்சாறு கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை குறைக்கும். தாகத்தையும் தணிக்கும்.

 சப்போட்டாவில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

 சப்போட்டாவில் காணப்படும் பாலிபினால்கள் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை எதிர்த்து போராடும் நோய் அபாயத்தை குறைக்கவும் உதவும் .

இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.

 இது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளிடமிருந்து பாதுகாக்கிறது.

 தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் படுக்கைக்குப் போகும் முன்பாக சப்போட்டா பழச்சாறு அருந்தினால் நன்கு தூக்கம் வரும்.
மூலநோய் உள்ளவர்களுக்கு குறிப்பாக ரத்தமூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் எளிய இயற்கை மருந்து.

 சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு குடல் புற்றுநோய் வராது.

 சப்போட்டாவில் கால்சியம் ,பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் எலும்புகளை இது வலுப்படுத்தும்.

 சப்போட்டா சாறுடன் எலுமிச்சம் பழச்சாறை சேர்த்து பருகினால் சளி தொல்லை குணமாகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை