சிக்கனம் என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமானது. நாம் சிக்கனமாக வாழ்ந்தால் நமது சந்ததியினர் சிறப்பாக வாழ்வார்கள். இதில் பெண்களின் பங்கு முக்கியமானது.
குடும்ப செலவுகளில் சிக்கனத்தை கடைபிடிப்பதன் மூலம் சேமிப்பு, அதிகரிக்கும் விலை, உயர்ந்த உடைகள், மற்றும் நகைகள் அணிந்து இருந்தால்தான் சமுதாயத்தில் மதிப்பு என்று கருதி சில பெண்கள் அவற்றுக்காக அதிகமாக செலவு செய்வார்கள் .
பெண்களின் திறமை, அவர்களின் பேச்சு , பண்பான அணுகுமுறை, போன்றவற்றால் தான் சமுதாயத்தில் நல்ல மதிப்பு பெற முடியும்.
அழகு நிலையங்கள்
காலமாற்றத்தால் அழகு நிலையங்கள் பெண்களின் வாழ்வில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. அழகு பராமரிப்புக்காக அதிகமாக செலவு செய்யும் பெண்களும் இருக்கிறார்கள். அவற்றைத் தவிர்த்து இயல்பான அழகுக்கு தேவையான பராமரிப்புகளை மட்டும் செய்து கொள்ளலாம்.
உணவு
கணவனும், மனைவியும் பணிக்கு செல்லும் பல குடும்பங்களில் சமையலில் சிக்கனம் தவறி போகும்.
நேரம் இல்லாத காரணத்தால் மாதத்தில் பல நாட்கள் வெளியில் வாங்கி சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள்.
விலை உயர்ந்த காய்கறிகள் சமையல் பொருட்கள் தான் உடலுக்கு நல்லது என நினைத்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவார்கள்.
அவற்றை விட நமக்கு அருகில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் பல மடங்கு சத்து கொண்டதோடு, விளைவும் குறைவாக இருக்கும்.
வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ? அவர்களுக்கு தகுந்தபடி சிக்கனமாக உணவு தயாரிப்பது அவசியம். அளவுக்கு அதிகமாக சமைத்து உணவை குப்பையில் கொட்டுவது தவறாகும்.
மனப்பிரச்சனை
சிக்கனத்தை கடைபிடிக்க தவறினால், பணப்பிரச்சனைகள் உருவாகி மனப்பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
குழந்தைகள் கேட்டது எல்லாம் உடனே வாங்கி கொடுப்பது தவறு சிக்கனமாக இருப்பதை குழந்தைகள் உணரும் படி பக்குவமாக எடுத்துச் சொல்வது பெற்றோரின் கடமையாகும்.
இதர பாெருட்கள்
தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிலும் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
புதிது புதிதாக விற்பனைக்கு வரும் விலை உயர்ந்த செல்போன்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது சிக்கனத்தின் அடிப்படையாகும்.
சிக்கனம் வேறு, கஞ்சத்தனம் வேறு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
சிக்கனம் சீரான வாழ்க்கைக்கு உதவும்.
கஞ்சத்தனம் யாரும் மதிக்காத நிலையை உண்டாக்கும்..
இதை உணர்ந்து தேவையில்லாத செலவுகளை தவிர்த்து சிக்கனத்தை கடைப்பிடித்தால் சிறப்பாக வாழலாம்.