குளியலுக்கு அழுகையா?

குளிப்பதற்கு அடப்பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்கும் வழிகள்:

 குதூகலமாக கொஞ்சி விளையாடும் பல குழந்தைகள் குளிக்கும் நேரம் வந்தாலே, அழுவதற்கு ஆரம்பித்து விடுவார்கள்.

அடம்பிடிக்கும் அவர்களை சமாளித்து குளிக்க வைப்பது தாய்மார்களுக்கு மிகப்பெரும் சவாலாகிவிடும்..

காரணங்கள்
 புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு உடலில் தண்ணீர் படும்போது வெப்பநிலை மாறுவதால் ஒருவித அச்சம் ஏற்படும் அதனால் அழுவார்கள்.

 சற்று வளர்ந்த பிள்ளைகளுக்கு குளிக்கும்போது சோப்பு நுரை கண்களில் படுவதால் உண்டாகும் எரிச்சல் மற்றும் அசவுகரிகத்தின் காரணமாக குளியல் பிடிக்காமல் போகிறது.

மிதமான சூடு
 குழந்தைகளை மிதமான சூடு உள்ள தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும்.

 அதிக சூடு அல்லது குளிர்ச்சியான நீரில் குளிப்பாட்டும் போது திடீர் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள்.

 அடுத்த முறை குளிக்கும் போது இந்த நிலை ஏற்படுமோ? என்ற பயமே அவர்களுக்கு குளியல் மீது வெறுப்பு உண்டாக காரணமாகிறது.

எரிச்சல்
 குழந்தைகளை தலைக்கு குளிக்க வைக்கும் போது ஷாம்பு கலந்த தண்ணீர், கண்களில் படுவதால் எரிச்சல் ஏற்பட்டு அழுவார்கள்.

 இதனைத் தவிர்க்க ஹெட் விசர் எனும் தடுப்பான்களை பயன்படுத்தலாம்.

 இதனால் தண்ணீர் கண்களில் படுவதை தவிர்க்க முடியும்.

அலர்ஜி
 குழந்தைகளின் சருமம் மென்மையானது. 

அவர்களுக்கு பயன்படுத்தும் பராமரிப்பு பொருட்களில் உள்ள ரசாயன கலவைகளால் சருமத்தில் அலர்ஜி அல்லது புண்கள் உண்டாகலாம்.

 இது குளிக்கும் போது குழந்தைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் எனவே குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனையின் படி அவர்களுக்கான சோப்பு ஷாம்பு மற்றும் லோஷன் களை தேர்வு செய்து உபயோகிக்கவும்.

செரிமான காேளாறு
 பசியால் அழும் குழந்தைகளை குளிக்க வைத்து விட்டு பசியாற்றலாம் என்பது தவறான எண்ணம்.

 உணவு கொடுத்து அரை மணி நேரம் கழித்து அவர்களை குளிக்க வைக்க வேண்டும்.

 இல்லையேல் செரிமான கோளாறுகள் ஏற்படலாம்.
தூக்கம்
 தூங்கும் குழந்தைகளை எழுப்பி குளிக்க வைக்க கூடாது..

 இது குழந்தையின் தூக்கத்தை பாதிப்பதோடு குளியல் மீதும் வெறுப்பை உண்டாக்கும்.

வேகம் கூடாது
 வேகமாக மடமடவென்று தண்ணீர் ஊற்றி குளிக்க வைக்க கூடாது.

 இது அசவுகரியத்தை ஏற்படுத்தலாம்.

 அலர்ஜி அல்லது புண்கள் இருக்கும் இடத்தில் வேகமாக தண்ணீர் ஊற்றுவதையும் ,சோப்பு போடுவதையும் தவிர்க்க வேண்டும்.

 குழந்தைகளை தூக்கும் போது உங்கள் கைகளை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை