மன அழுத்தத்தை தவிர்க்கும் வழிகள்

மன அழுத்தத்தை தவிர்க்கும் வழிகள்
 நமக்கு வருத்தம் தரக்கூடிய ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது ஏற்படும் கவலை அல்லது உணர்ச்சிகளை மன அழுத்தமாக மாறுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 இது ஒரு இயற்கையான மனித எதிர்வினையாகும்.

 நம் வாழ்வில் ஏற்படும் சவால்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் கவலைகளை எதிர்கொள்ள மனம் நம்மை தூண்டுகிறது .

இதனால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மன அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள் .

ஆனால் மன அழுத்தத்திற்கு ஒவ்வொருவரும் பதில் அளிக்கும் விதம்தான் ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

 மன அழுத்தத்தால் உணரப்பட உணரப்பட்ட அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் போது மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஹைபோதாலமஸ் உடலில் ஒரு எச்சரிக்கை அமைப்பை உருவாக்குகிறது .

நரம்பு மற்றும் ஹார்மோன்களின் சமிக்கைகள் மூலம் இந்த அமைப்பு சிறுநீரகத்தின் மேல் காணப்படும் அட்ரினல் சுரப்பிகளை மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் எழுச்சியை வெளியிட தூண்டுகிறது.

 அட்ரினலின் இதயத்தை வேகமாக துடிக்க செய்து ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்து அதிக ஆற்றலை தருகிறது.

 கார்டிசோல் மன அழுத்தத்தை தூண்டும் முதன்மை ஹார்மோன் .

 இது ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் என்றும் அழைக்கப்படும் சர்க்கரையை அதிகரிக்கிறது.

 மூளையின் குளுக்கோஸ் பயன்பாட்டை அதிகரிக்கிறது.

 மன அழுத்தத்தால் ஏற்படும் எதிர் வினையால் கார்டிசோல், அட்ரினலின் இவைகளின் அதிகப்படியான வெளிப்பாடு உடலின் அனைத்து செயல்முறைகளையும் சீர்குலைக்கும்.

 இது பல உடல் நலப் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது .

குறிப்பாக கவலை, மனச்சோர்வு, செரிமான பிரச்சனைகள், தலைவலி, தசை மற்றும் உடல் வலி, நீரழிவு, இதய நோய், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் தூக்க பிரச்சனைகள், எடை அதிகரிப்பு, ஞாபகம் மறதி, கவனக்குறைவு, முடிவெடுப்பது திணறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் .

மன அழுத்தத்தை தவிர்க்கும் வழிகள்

 தினமும் சீரான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

 இறைப் பிரார்த்தனை, ஆழ்ந்த சுவாசம், தியானம், யோகா செய்வது நல்ல பலன் தரும் .

நகைச்சுவை உணர்வுடன் இருப்பது மற்றும் நகைச்சுவைகளை ரசிப்பது, நல்ல நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது, பொழுதுபோக்குகளுக்கு நேரம் ஒதுக்குவது , புத்தகம் படிப்பது நல்லது.

 தினமும் போதுமான நேரம் தூங்க வேண்டும் .
ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.

1 கருத்துகள்

புதியது பழையவை