நீங்காத கரையா ? கவலை வேண்டாம்

நீங்காத கரையா ? கவலை வேண்டாம்

வாழைக்காய் அல்லது வாழை பூவை நறுக்கும்போது கையில் படியும் கரையைப் போக்க புளி அல்லது எலுமிச்சை சாறு அல்லது தயிர் இவைகளில் ஏதாவது ஒன்றை தடவுங்கள். பிறகு தண்ணீரினால் சுத்தம் செய்து கொள்ளுங்கள். கரை போய்விடும் .

பலாப்பழத்தை நறுக்கும்போது கைகளில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டால் பலா பிசின் கைகளில் ஒட்டிக் கொள்ளாது .சுளைகளை சுலபமாக எடுக்கலாம்.

 எவர்சில்வர் பாத்திரங்களின் மேல் உள்ள கரையைப் போக்க சிறிது டூத் பேஸ்ட்டை எடுத்து அதன் மேலே ஒரு துணியை கொண்டு துடையுங்கள். கரைகள் போவதுடன் பாத்திரங்கள் பள பளவென்று இருக்கும்.

 சமையல் சோடாவை கரைத்த தண்ணீரை ஒரு துணியில் நனைத்து எடுத்துக்கொண்டு அதனை இஸ்திரி பெட்டியின் அடியில் கறை பட்ட இடத்தில் அழுத்தி துடைத்தால் கரை போகும் .

துணிகளில் காபி, டீ கரைப்பட்டால் கிளிசரினை ஒரு சிறிய துணியில் நனைத்து கரைபட்ட இடத்தில் தேய்க்கவும். கரை போய்விடும்.

 சோப்பு டால் கரசின் போன்றவைகளின் நாற்றம் கைகளில் இருந்து உடனடியாக போக வேண்டும் என்றால் ஒரு வெற்றிலையை எடுத்து கசக்கி இரண்டு கைகளிலும் அதனை தேய்த்துக் கொண்டு பிறகு சுத்தமான நீரில் கழுவுங்கள்.

 எலுமிச்சை பழ தோல்களால் பித்தளை பாத்திரங்களை தேய்த்தால் கரைகள் போய் பளிச்சென்று தோன்றும்.

 உப்பு கலந்த தண்ணீரினால் டப்பாக்களை கழுவினால் அவற்றில் உள்ள கரைகள் போகும் .

எலுமிச்சை சாறையும், உப்பையும் போட்டு தேய்த்தால் இரும்பு துரு கரை நீங்கும் .

இங்க் கறை போக துணியில் கறை பட்ட இடத்தில் எலுமிச்சை சாறு ஊற்றி தேய்த்து சில நிமிடங்களுக்கு பிறகு துவைத்து பாருங்கள் கரை இருக்காது.

 ரத்தக்கரை துணியில் பட்டால் பட்ட இடத்தில் சுடு தண்ணீரில் உப்பு போட்டு கரைத்து அந்த இடத்தில் விட்டு பிறகு துவைக்கவும்.
 துணியில் எண்ணெய் கரை பட்டால் பெட்ரோலை அந்த இடத்தில் தடவி பிறகு சோப்பினால் துவைத்தால் போய்விடும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை