மாதவிடாய் நாட்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
மாதவிடாய் நாட்களில் பொதுவாகவே உடல் சூட்டை குறைக்கும் உணவுகளை தான் சாப்பிட வேண்டும்.
மற்ற நாட்களில் என்றால் பரவாயில்லை மாதவிடாய் காலங்களில் பெண்கள் சில உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது என்கிறார்கள்.
உடல் நல நிபுணர்கள் அந்த வகையில் பதப்படுத்தப்பட்ட செய்யப்பட்ட உணவுகளை பெண்கள் இந்த நாட்களில் தவிர்க்கலாம் .
இவ்வாறான உணவுகள் செரிமான பிரச்சனையை வழி வகுக்கும்.
அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.
செரிமானத்துக்கு எளிதான உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.
பால் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இதனால் வயிற்று வலியுடன், வாந்தி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
அதிக இனிப்பு பண்டங்களை சாப்பிடாமல் தவிர்க்கலாம் .
இதனால் மாதவிடாய் வேலையில் ஏற்படும் மன அலை பாய்தல் அதிகமாகும்.
அதிக காபி குடிப்பதை தடுக்கலாம்.
இது உறக்கத்தை பாதித்து ஓய்வு எடுப்பதை குறைக்கலாம்.
உப்பு தன்மை அதிகம் கொண்ட சிப்ஸ் போன்றவற்றை சாப்பிட்டால் அதனால் ரத்தத்தில் அழுத்தம் சற்று அதிகரித்து ஏற்கனவே இருக்கும் அசதியை அதிகரிக்கலாம்.