மெஹந்தி மின்ன
மெஹந்தி போடுவதற்கு முன்பு அந்த இடத்தில் ஆயில் பூசி விட்டு போட வேண்டும் .
காயும் வரை காத்திருந்து எரியும் மெழுகுவர்த்தி மேல் காட்டி கையை சூடாக்கினால் அல்லது கொதிக்க வைத்த நீரில் கையை காட்டி ஆவி பிடித்தால் மெஹந்தி நன்றாக பிடிக்கும்.
முக்கால்வாசி மெஹந்தி உலர்ந்த பிறகு சிறிது சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பஞ்சை நினைத்து மெஹந்தி மேல் ஒற்றி எடுத்தால் அடர் சிவப்பு கலந்த பிரவுன் கலர் கிடைக்கும் .
மருந்தாணி இலைகளுடன் வெண்டைக்காயை சேர்த்து அரைத்து நகங்களில் வைத்தால் எளிதாக உதிராது .
கூடுதல் சிவப்பு நிறம் கிடைக்கும்.
மெஹந்தி போட்டுக் கொண்ட மறுநாள் காலை துடைக்கவும் .
ஆனால் குறைந்தது 12 மணி நேரத்திற்கு உங்கள் கைகள் மற்றும் கால்களில் தண்ணீர் படுவதை தவிர்க்கலாம் மற்றும் சோப்பு பயன்படுத்த வேண்டாம் .
இது மிகவும் சவாலானதாக இருக்கும்.
ஆனால் முயற்சிக்கவும் .
இது உங்கள் மெஹந்தியை மிகவும் சிறப்பாக்கச் செய்யும்.
ரெண்டு மணி நேரம் கழித்து தேங்காய் எண்ணெயை மெஹந்தி போடப்பட்ட பகுதிகளில் தடவவும்.