தாய்ப்பால் தானத்தில் கின்னஸ் சாதனை
அமெரிக்காவில் டெக்ஸாசை சேர்ந்த 36 வயதான ஆலிஸ் ஓக்லெட்ரீ 2645.58 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் .
2014 இல் 1569.79 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து அவர் நிகழ்த்திய கின்னஸ் சாதனையை 2024 இல் அவரே முறியடித்து உள்ளார்.
தாய்ப்பால் தேவைப்படும் எண்ணற்ற மழலைகள் கருத்திலே கொண்டு தனது முதல் மகன் கைல் 2010ல் பிறந்ததும் தாய்ப்பாலை தானம் செய்ய தொடங்கினார் .
ஆலிஸ் இது குறித்து அவர் கூறியது:
எனக்கு தாய்ப்பால் அதிகமாக சுரந்ததால் பாலை எடுத்து வெளியே கொட்டினேன்.
பல ஆயிரம் குழந்தைகள் தாய்ப்பால் கிடைக்காமல் புட்டி பாலை குடிக்கின்றனர் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் தருவதற்கான பால் சுரப்பதில்லை என்பதும் அப்போது எனக்கு தெரிந்தது.
இதை அறிந்த நர்ஸ் தாய்பாலை தானம் செய்கிறீர்களா? என்று கேட்க நான் சம்மதித்தேன்.
அடுத்த இரண்டு மகன்கள் பிறக்க தாய்ப்பால் தானம் தொடர்ந்தது மூன்று குழந்தைகளுக்குப் பிறகு வாடகை தாயாகவும் இருந்து குழந்தைகளை பெற்றுக் கொடுத்தேன் .
அப்போதும் தாய்ப்பால் தானம் தொடர்ந்தது நான் நிறைய தண்ணீர் குடித்தேன் .
சத்தான உணவுகளையே சாப்பிட்டேன்.
சரியான இடைவெளிகளில் பால் உறிஞ்சும் கருவியால் உறிஞ்சி எடுத்து சேமித்தேன்.
எனது பால் எத்தனை மழலைகளுக்கு உணவாகிறது என்ற சந்தோஷத்தில் பால் அதிகம் சுரந்தது.
எனது பால் இதுவரை மூன்றரை லட்சம் மழலைகளுக்கு உணவாக சென்று அடைந்துள்ளது.
இது நான் பெருமை கொள்ளும் விஷயமாக அமைந்தது மட்டுமில்லாமல் கின்னஸ் சாதனையாளராகவும் உயர்த்தி உள்ளது.
என்னிடம் அதிகப்படியான பணம் இல்லை.
எனக்கு குடும்பம் இருப்பதால் பலருக்கும் பணம் கொடுத்து உதவ முடியாது .
ஆனால் என்னிடம் தாய்ப்பால் அதிகமாக இருக்கிறது இதை நான் தாராளமாக தானம் செய்ய முடியும். அதை தான் செய்து வருகிறேன்.
என் சமூகத்துக்கு என்னால் முடிந்ததை வழங்கி வருகிறேன் என்கிறார் ஆலிஸ்.