நான்காயிரம் அடிகளிலிருந்து ஆரம்பிங்கள்
மாறிவிட்ட வாழ்வு முறையால் ஏற்படும் தொப்பை அல்லது தொல்லைகளில் இருந்து விடுபட முயல்வோர் நால்தோறும் ஆயிரம் அடிகள் நடைகளை மேற்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களிலும் பரப்புகிறார்கள்.
அத்துடன் நாள் தொறும் பத்தாயிரம் நடைகள் நடந்தால் தான் ஆரோக்கியமான உடல் சாத்தியம் என்ற ஒரு நம்பிக்கை பரவலாக்கப்பட்டுள்ளது .
பிட்னஸ் டிராக்டர்கள் அல்லது மிகவும் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த உடல் வல்லுனர்கள் கொடுக்கும் ஆலோசனைகளின் பெயரில் பலரும் இந்த மேஜிக் எண்னை தொட்டுவிட துடிக்கிறார்கள்.
இது கிட்டத்தட்ட ஒரு மனநலன் சார்ந்த விஷயமாகவே மாறிவிட்டது .
ஒரு சிலரோ இந்த பத்தாயிரம் என்ற எண் எங்களை அச்சுறுத்துகிறது.
நாள்தோறும் நடந்து முயன்று இந்த எண்ணை அடைய முடியாது என்ற சோர்வை ஏற்படுத்துகிறது என்கிறார்கள்.
மிகச் சிறந்த உடல்நலத்துக்கு நாள்தோறும் பத்தாயிரம் நடைகள் என்பது அனைவருக்கும் நிரந்தரமான ஒரு இலக்காக முன் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் உடல் நலம் என்பது பல்வேறு காரணிகளால் புரிந்து கொள்வதிலும் ஒரே விதிக்கு உட்படுத்துவதிலும் வேறுபடுகிறது .
அதாவது ஒருவர் எடுக்கும் உணவே உறங்கும் நேரம் செய்யும் வேலை மனநிலை உள்ளிட்ட அனைத்துமே இதற்கு கணக்கில் கொண்டு வர வேண்டும்.
அப்போதுதான் கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும்.
ஆனால் பொதுவாக அனைவருக்கும் ஒரே கணக்கு என்றால் நிச்சயம் அது தப்பான கணக்காகவே முடிந்துவிடும் என்று எச்சரிக்கை எழுந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக அனைவரும் தினமும் பத்தாயிரம் அடிகள் நடக்க வேண்டும் என்று நிர்ணயிக்க படுகிறது.
இந்த எண் எங்கிருந்து தொடங்கியது யார் இந்த எண்ணை மரணித்தார்கள் யாருக்காக இது நிர்ணயிக்கப்பட்டது.
கடைசியாக ஒரு கேள்வி இந்த ஒட்டுமொத்தமாக வெறும் நம்பிக்கை தானா ? உண்மை நிலவரம் என்ன?
ஜப்பானில் 1960 ஆம் ஆண்டு ஒருவர் நாள்தோறும் பத்தாயிரம் நடையில் நடக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது .
இதன் மூலம் பீடோமீட்டர் என்ற கருவி அதிகம் விற்பனையானது.
இதற்கு நல்ல சந்தைப்படுத்துதல் ஆக இந்த பத்தாயிரம் நடை உதவியது.
இந்த எண் கிட்டதட்ட எப்படி வந்தது என்றால் அடைவது சற்று கடினமாகவும், இந்த எண்ணை பார்க்க கவனத்தை இருப்பதாகவும் இருந்ததால் தான் நிபுணர்கள் சொல்வது என்ன வெறுமனே எத்தனை நடை நடக்கிறோம் என்பதை கணக்கிடுவதில் தவறில்லை.
ஒவ்வொருவருக்கும் தனித்தனி இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அதன் படி நடக்கலாம்.
உண்மையான எண் என்பது பல்வேறு காரணிகளால் தான் வருகிறது.
உடல் நலனை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மற்றும் உடல் நன்கு இயக்க நிலையில் இருப்பது கட்டாயம் தான் .
ஆனால் உடலை வருத்தி அதிக நடைகள் நடப்பது எதிர்மறை பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
நடப்பதை அதிகரிப்பது எப்படி?
கொஞ்சம் கொஞ்சமாக நடக்கத் தொடங்குங்கள் .
அதிகம் நடப்பதை விடவும் படிகள் ஏறுவது சிறந்தது .
அருகில் இருக்கும் கடைகளுக்கு நடந்து செல்லுங்கள்.
நடக்கும்போது இசையை ரசிக்கலாம்.
கதை கேட்கலாம் .
உடற்பயிற்சிக்கு இடைவெளி விடலாம்.
ஒரே உடற்பயிற்சியில் முழு எண்ணிக்கையும் முடிக்க தருணிக்க வேண்டாம் .
எத்தனை அடிகள் நடக்க வேண்டும் ஒரு நாளைக்கு 4000 நடைகளுக்கும் கீழ் குறைய வேண்டாம்.
உங்கள் வயது உடல் நிலை கட்டுக்கோப்பு உள்ளிட்டவற்றை கொண்டு உங்கள் நடை இலக்கை தீர்மானிக்கலாம் .
அடிக்கடி நாம் அங்கும் இங்கும் செல்வதை நடைப்பயிற்சியாக கணக்கில் எடுக்க முடியாது.
உங்களால் நடக்க முடிந்த அளவை நிர்ணயித்துக் கொண்டு அதனை விட சில ஆயிரம் அடிகள் இலக்காகக் கொண்டு படிப்படியாக அதிகரிக்கலாம்.
எடுத்ததும் பெரிய எண் வேண்டாம்.
எப்பொழுது நடக்கலாம்.
பொதுவாகவே அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் பொருந்தாது அதைப்போலவே இந்த கேள்வியும் உங்களின் அன்றாட வேலை நேரத்தை பொறுத்து அதை அமைத்துக் கொள்ளலாம்.
உண்மையிலேயே உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சிக்கு நேரம் என்பது முக்கியமல்ல.
உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு தான் நடைபயிற்சி.
அதை மட்டும் புரிந்து கொண்டால் எதுவும் உங்களை பாதிக்காது.
ஆரோக்கியம் அவசியம்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குநடை பயிற்சி பற்றிய ஒரு சில மாயையகள் தங்க இது போன்ற சிறிய ஆலோசனைகள் அவசியம் தேவை. செய்திக்கு நல்ல சுவாரஸ்யமான தலைப்பு வைத்துள்ளார்கள். வாழ்த்தி மகிழும் @வண்ணப்பலகை
பதிலளிநீக்குநன்றி ஐயா
பதிலளிநீக்கு