இரும்பு சத்துள்ள உணவுகள்

இரும்பு சத்துள்ள உணவுகள்

நாற்பது வயதை கடந்த பெண்களின் உடலில் இயற்கையாகவே, ஹீமோகுளோபின் அல்லது குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

 சராசரியாக பெண்களுக்கு 12 முதல் 15.5 கிராம் வரையிலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை இருக்க வேண்டும்.

 இல்லையெனில் மயக்கம், சோர்வு, உற்சாகமின்மை, முடி உதிர்வது போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் .

அத்தகையவர்கள் மருத்துவர்கள் இடம் சென்று இரும்பு சத்து அதிகம் உள்ள டானிக்ககளையும் , மாத்திரைகளையும் வாங்கி சாப்பிடுவதைவிட இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், கீரைகள் உள்ளிட்ட உணவு வகைகளை அன்றாடம் தங்களது உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை தானாகவே உயரும்.

 பெண்கள் தங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில உணவுப் பொருட்கள்.
 முருங்கைக்கீரை , சுண்டைக்காய், சிவப்பு மூக்கடலை, பாசிப்பயறு, மணத்தக்காளி , வற்றல், எள்ளுருண்டை, அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலை உருண்டை, கருப்பு திராட்சை, நாட்டு மாதுளை , நாட்டு பேரிச்சை, கருவேப்பிலை துவையல்.

கருத்துரையிடுக

புதியது பழையவை