பாகற்காய்
கசப்பு ருசி கொண்ட பாகற்காயை அனேகர் விரும்பி சாப்பிடுவதில்லை.
அதன் மருத்துவ சக்தியை உணர்ந்து கொண்ட ஒரு சிலர் தான் பாகற்காயை சமைத்து உண்பர்.
பாகற்காயை அடிக்கடி சாப்பிட்டு வருபவருடைய கண் பார்வை தெளிவாகும்.
பல் கோளாறுகள் நீங்கி பல் உறுதிப்படும்.
எலும்புகள் உறுதி அடையும்.
நரம்புகள் வலம் பெறும்.
உடல் பலம் பெறும்.
உடலில் உள்ள ரத்தம் தூய்மைப்படுத்தப்பட்டு புதிய ரத்தம் உற்பத்தியாகும் .
இளமையில் இருந்தே பாகற்காயை சாப்பிட்டு வருபவர் முதுமையிலும் இளமையுடன் தோற்றமளிக்கலாம்.
பாகற்காயால் சரும நோய், வாத நோய், கிருமி நோய், மூலநோய் ஆகியவை நீங்கும் .
இப்போது ஒவ்வொருவரின் குடும்பத்திலும் நிறைந்திருக்கும் நீரழிவு நோயை குணப்படுத்தும் சக்தி பாகற்காய்க்கு உண்டு .
வைட்டமின் ஏ, பி, இ, உயிர்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்த பாகற்காயை நாம் வாரத்திற்கு ஒருமுறை எனும் சமைத்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான அத்தனை நன்மைகளும் குறைவின்றி கிடைக்கும்.