உபா சட்டம் என்பது
பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் அமைப்பாகும்.
சுதந்திரம் ஒன்று கூடுதல் என்ற அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்பு சட்டம் 19-வது பிரிவு இந்திய குடிமக்களுக்கு வழங்கியுள்ளது.
1967 இல் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டது.
உபா என்று அழைக்கப்படும் இந்த சட்டத்தில் எது தீவிரவாத நடவடிக்கை என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்தச் சட்டம் இந்த சட்டத்தின் பிரிவு 35 படி அரசு நினைத்தால் எந்த இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்க முடியும் .
அவ்வாறு அறிவித்தால் அந்த இயக்கத்தில் அதுவரை உறுப்பினர்களாக இருந்த அனைவரும் தீவிரவாதிகளாகவே கருதப்படுவார்கள்.
அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தாலோ? அந்த இயக்கத்தின் வெளியீடுகளை வீட்டில் வைத்திருந்தாலோ ? கூட இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய முடியும்.
இந்த சட்டத்தின் பிரிவு 43 இன் படி குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அதிகபட்சமாக 30 நாட்கள் போலீஸ்காவல் வழங்க முடியும்.
அதிகபட்சம் 90 நாட்கள் எந்தவித விசாரணையும் இன்றி நீதிமன்ற காவலில் வைக்க முடியும் .
180 நாட்களுக்கு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யாமலேயே சிறையில் அடைத்து வைக்க முடியும்.
எந்த நீதிமன்றத்திலும் இவர் முன் ஜாமின் பெற முடியாது.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் பிரிவு 43 இன் படி ஜாமீனிதில் வெளியே வருவது இயலாத காரியம்.
இவர்கள் அதற்காக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள்.
இந்த நீதிமன்ற நடவடிக்கையை பொதுமக்களோ? பத்திரிக்கையாளர்களோ? பார்ப்பதற்கு அனுமதி இல்லை.
பயனுள்ள குறிப்புகள்
பதிலளிநீக்குஆம். இதைப் பற்றி அறிவது இன்றைய கால அவசியம்
நீக்கு