தக்காளி பற்றிய நல்ல செய்தி

தக்காளி பற்றிய நல்ல செய்தி
 பெருமழை தொடங்கிய பிறகு காய்கறிகளின் விலை எகிறிவிட்டது. வரத்து குறைவு என்று இதற்கு விளக்கமும் சொல்கிறார்கள். குறிப்பாக தங்கத்தை போல் எளிய மக்கள் ஏக்கத்தோடு பார்க்க வைக்கும் அளவு தக்காளியின் விலை உச்சம் தொட்டிருக்கிறது.

 இதே தக்காளி அவ்வப்போது கிலோ 5 ரூபாய்க்கு கீழாக விற்கப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம் என்பதால் இது நிரந்தரமுள்ள நிரந்தரமில்ல.

 எனவே தக்காளி தொக்கு செய்கிற காலம் விரைவில் வரும் என்ற நம்பிக்கையுடன் தக்காளியைப் பற்றி சில நல்ல தகவல்களை நாம் இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

 தக்காளியின் அறிவியல் பெயர் Solanum lyoopersicum நமது உடலின் சரும பராமரிப்புக்கும், இதய நலனுக்கும் மிகவும் நன்மை தரக்கூடியது .

தக்காளி மேலும் உடல் எடை குறைப்புக்கு உதவக்கூடியது.

 தக்காளியில் காணப்படும் Lycopenne என்ற சத்து புற்றுநோய் உண்டாக்காமல் தடுக்கக்கூடியது.

 இரும்பு சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ , வைட்டமின் பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் தக்காளியில் மிகுதியாக அடங்கி உள்ளன .

சமைத்து சாப்பிடுவதாலோ ? அப்படியே பச்சையாக சாப்பிடுவது நாளோ? தக்காளியின் சத்துக்கள் மாறுபடுவதில்லை.

 எப்படி எடுத்துக் கொண்டாலும் தக்காளியின் சத்துக்கள் குறையாமல் அப்படியே நமக்கு கிடைக்கும் என்பது இதன் விசேஷ சிறப்பு .

தக்காளியில் உள்ள லைகோபீன் சிறந்த புற்றுநோய் தடுப்பாடாக இருக்கிறது .

பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் சி ஆகியவை இதயத்திற்கு சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவு பொருளாகவும் இதய நோய்களை தவிர்க்கவும் பயன்படுகிறது.

 தக்காளியில் உள்ள சுண்ணாம்புச் சத்தும் , வைட்டமின் கே-வும் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுகிறது.

 லைகோபீன் லூட்டின் எனும் பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் கண் தொடர்பான நோய்களை தடுக்கிறது.

 நம்முடைய சருமம், நகம், முடி மற்றும் இணைப்பு திசுக்களுக்கு ஒரு முக்கிய சத்துப் பொருளாக குலோஜன் விளங்குகிறது .

இந்த கொலாஜான் தக்காளியில் அதிகம் உண்டு .

மேலும் இதில் காணப்படும் போலிக் அமிலம் கருவுற்ற காலங்களில் பெண்களில் கருவில் உள்ள சிசுவின் நரம்பு மண்டலத்தின் குழல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

 உடலில் சேருகின்ற கொழுப்பினை ரத்த நாடி மற்றும் நாளங்களில் தேங்காமல் தடுக்க தக்காளியில் உள்ள நியாசின் என்ற உயிர் பொருளானது உதவுகிறது.

 வழக்கமாக சாம்பார், ரசம் என்று மட்டும் பரவலாக தக்காளியை பயன்படுத்துகிறோம்.

 இதுபோல் அன்றாட உணவில் சேர்மானப் பொருளாக மட்டுமே பயன்படுத்தாமல் சூப்பாகவும், பச்சையாகவும் அடிக்கடி தக்காளியை சேர்த்துக் கொள்ளவும் .

தக்காளியில் பல வகை உண்டு.

 அவற்றில் நாட்டுத்தக்காளியே நமக்கு சிறந்தது.

 மரபணு மாற்றப்பட்ட தக்காளி வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

 அதேபோல் ரெடிமேடாக கிடைக்கும் சாஸ் போன்றவைகளை தடுத்து விடுவது நல்லது .
அதில் சுவைக்காகவும், கெட்டுப்போகாமல் இருப்பதற்காகவும் ஏராளமான ரசாயனங்கள் கலக்கப்படுகிறது.

2 கருத்துகள்

புதியது பழையவை