கர்ப்பிணிகள் ஏன் ஒருக்கணித்து படுக்க வேண்டும்?
கர்ப்ப காலத்தில் ஒருக்கணித்துதான் படுக்க வேண்டுமா? ஏன் நேராக படுக்கக் கூடாது எந்த விவாதத்தில் இருந்து குழந்தையின் அசைவை உணர முடியுமா? நச்சுக்கொடி சுற்றிக் கொண்டால் சுகப்பிரசவம் ஆகாதா? போன்ற ஏராளமான கேள்விகள் கர்ப்பிணிகள் மனதில் எழும்.
அவற்றுக்கு வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகள்:
ஏன் ஒரு கணித்து படுக்க வேண்டும்.
ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தையின் உடல் எடையானது ஒன்று முதல் ஒன்றரை கிலோ வரை இருக்கும்.
இதனால் அம்மாவின் வயிற்றில் மேல் அழுத்தம் ஏற்படும்.
இந்த நேரத்தில் நேராக படுத்து உறங்குவது கர்ப்பிணிகளுக்கு சற்று சிரமமாக இருக்கும்.
அதனால்தான் வீட்டில் உள்ள பெரியவர்கள் கர்ப்பிணி பெண்களை ஒருங்கிணைத்து தூங்கும்படி சொல்வார்கள்.
இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?
கர்ப்பிணிகள் ஒருகணித்து படுக்கும்போது உடலில் உள்ள பெரிய ரத்தக்குழாய்களான அயோட மற்றும் இன்ஃபிரியர் வீணாகவோ போன்றவற்றின் மேல் அழுத்தம் குறையும்.
இதனால் கர்ப்பப்பைக்கு நல்ல ரத்த ஓட்டம் இருக்கும் .
விளைவு தொப்புள் கொடி வழியாக குழந்தைகளுக்கும் தேவையான ரத்தம் செல்லும்.
ஆகையால் தேவையான சத்துக்கள் கிடைத்து குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
ஆழ்ந்த உறக்கத்துக்கு சிறப்பான பொசிஷன் கர்ப்பிணிகள் உறங்குவதற்கு சிறப்பான பொசிஷன் எதுவென்றால் இதை சொல்லலாம்.
கால்களை மடக்கி வயிற்றுக்கு அருகில் வைத்துக் கொண்டு கருவில் இருக்கும் சிசு போல உறங்கினால் சற்று இதமாக இருக்கும்.
தலையணையை இரு கால்களுக்கு இடையில் வைத்தோ அல்லது வயிற்றுக்கு முன் பக்கமோ அல்லது முதுகு பக்கமோ வைத்து உறங்கினால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.
ஆறு முதல் எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்கினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .
குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சியும் மேம்படும்.
சரியான பொசிசனில் படுக்கவில்லை என்றால் ஆழ்ந்த உறக்கம் வராது.
குழந்தையின் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.
பயன் தரும் வகையில் உள்ளது
பதிலளிநீக்குநன்றி
நீக்குNice
பதிலளிநீக்குநன்றி
நீக்கு