தலைமுடி காக்கும் நெல்லிக்காய்
காலை உணவுக்கு முன் ஒரு பெரிய நெல்லிக்காயை சாப்பிடவும்.
காலை உணவு முடித்த பின் ஒரு கடலை மிட்டாய் சாப்பிடவும்.
மதிய உணவுக்கு முன் ஒரு கிளாஸ் மோர் அதில் சிறிது கருவேப்பிலை அல்லது இளநீர் குடிக்கவும் .
மதிய உணவு பச்சை காய்கறிகளுடன் சாப்பிடவும்.
ஒரு நாள் பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கொண்டை கடலை, உருளைக்கிழங்கு, சுரைக்காய், முருங்கை கீரை, பசலை கீரை, மட்டன் அல்லது மீன் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
சிக்கன் என்றாவது ஒரு நாள் மட்டும் போதும் தினமும் வேண்டாம்.
மாலையில் ஆரஞ்சு ஜூஸ், சாத்துக்குடி, மாதுளை, பீட்ரூட் ஜூஸ் ஏதாவது ஒன்றை தொடர்ந்து எடுத்துக் கொள்ளவும் அல்லது பயிறு வகைகளில் ஏதாவது ஒன்று.
இரவு உறக்கத்துக்கு முன் ஒரு நெல்லிக்காய், டார்க் சாக்லேட் சாப்பிடவும்.
இரவில் பரோட்டாவை தவிர்ப்பது நல்லது .
தூங்கும் முன் 5 பாதாம் சாப்பிடவும்.
குறைந்தது 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.
வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல் இந்த முறையை கடைபிடிக்க முடியும், ஆரோக்கியம் மேம்படும்.
இயற்கை வைத்திய குறிப்பு நன்று
பதிலளிநீக்கு