தூக்கமின்மையா ?அலட்சியம் செய்ய வேண்டாம்
தூக்கம் என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும் .
சராசரியாக ஒரு மனிதனின் தூக்க நேரம் என்பது ஒரு நாளுக்கு ஆறு முதல் 8 மணி நேரம் வரை ஆகும்.
தூங்கும் நேரம் ஆனது குறைய குறைய மனிதர்களுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர்.
மருத்துவர்கள் தூக்கமின்மையின் அறிகுறிகள் என கூறுவது
தூக்கத்தில் சிரமம், சீக்கிரமாகவே விழிப்பு தட்டுவது, தூக்க பற்றாக்குறையால் தினமும் செய்ய வேண்டிய செயற்பாட்டில் ஏற்படும் சிக்கல்கள், அதிகமான கவனச் சிதறல், மனநிலையில் தடுமாற்றம் மற்றும் பதற்றம், தூக்கமின்மைக்கான காரணம், தூங்குவதற்கு முன்பாக அதிக நேரம் கைப்பேசி போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவது முக்கிய காரணமாகும்.
தூங்குவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்னதாகவே இரவு நேர உணவை உட்கொள்வது கட்டாயமாகும்.
மேலும் இரவு நேரத்தில் காபி மற்றும் மதுப்பழக்கம் கூடாது.
அதிகமான சத்தம், சீரற்ற வெப்பநிலை மற்றும் வெளிச்சம் நீண்ட நாள் உடல் வலி, ஆஸ்துமா மற்றும் அமில ரிப்ளக்ஸ் போன்ற சில மருத்துவ பிரச்சனைகள் கர்ப்ப காலம் மற்றும் மாதவிடாய் நாட்களில் ஹார்மோன்களின் நிலை சார்ந்த மாற்றங்கள் கூட சில சமயங்களில் தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கக்கூடும்.
குடும்ப கஷ்டம், பொருளாதார ரீதியான பிரச்சினைகள், மனதிற்கு நெருக்கமானவர்களின் பிரிவு, பணிச்சுமை என ஏராளமான சமூகம் சார்ந்த மனப் பிரச்சனைகள் சிலருக்கு மருந்து மற்றும் சிகிச்சைகள் கூட தூக்கமின்மைக்கு காரணமாக அமையும்.
அதாவது ஒரு சில ஆன்டி டிரஸண்ட்ஸ் மற்றும் ஆஸ்துமா அல்லது உயர் ரத்த அழுத்தத்திற்கான சிகிச்சைகள் உட்பட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட பல மருந்துகள் கூட தூக்கத்தின் கால அளவை குறைக்கும்.
தூக்கத்தை அதிகரிக்க உதவும்.
உணவு பொருட்கள் வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் கார்போஹைட்ரேட் சக்தியானது இயற்கையாகவே தூக்கத்தை வரவழைக்க உதவும்.
இரவில் தொடர்ந்து இந்த பழத்தை உண்டு வந்தால் நமது உடலுக்கு மிகவும் நல்லது.
பால்
உறங்கச் செல்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு மிதமான சூட்டில் பால் அருந்துவது நல்லது.
மேலும் பாலில் உள்ள மெலடோனின் மற்றும் ஷரட்டோனின் தூக்கம் வருவதற்கு உதவியாக இருக்கும் .
அது மட்டும் ரீசெரட்டோனின் மூளைக்கு அமைதியை கொடுத்து, நமது மனநிலையை அமைதிப்படுத்தும்.
தேன்
தேனில் இருக்கும் இயற்கை சர்க்கரை இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
இது மூளையில் ரிப்பீட் டோபல் மற்றும் சேரட்டோனின் நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும் .
எனவே ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு நேர உணவில் தேனை சேர்த்துக் கொள்வது நல்லது.