வெள்ளரி அற்புதம்
ஒரு காலத்தில் சிறுவர்கள் வெள்ளரிக்காயை கடிப்பதும், பெரியவர்கள் வெள்ளரி பழம் சாப்பிடுவதும் அன்றாடம் நடக்கும் நிகழ்வாக இருந்தது.
ஆனால் இப்பொழுது சிறுவர்கள் சிப்ஸ், சாக்லேட் என்று மாறிவிட்டார்கள் என்றால், பெரியவர்கள் ஆப்பிள், சாத்துக்குடி என்று நாட்டுக் காயை மறந்துவிட்டார்கள்.
வெள்ளரிக்காய் எத்தனை நன்மை தரக்கூடியது என்பதை பலரும் அறிவதில்லை.
காய்கறிகளில் மிகக் குறைவான கலோரி அளவு கொண்டதுதான் வெள்ளரிக்காய்.
100 கிராம் வெள்ளரிக்காயில் வெறும் 16 கலாேரி தான் உள்ளது.
95 சதவீதம் நீர் சத்து நிறைந்துள்ளது.
இதில் கொழுப்பு சத்து இல்லை என்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் ஏற்றது.
வெள்ளரிக்காயில் உள்ள நீர்ச்சத்து மாவு வறட்சியை போக்கும். பசியை தூண்டும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.
ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் இதில் அதிகம்.
வெள்ளரியில் உள்ள வைட்டமின்கள் மாங்கனிசு, பொட்டாசியம், சிலிக்கான் போன்ற தாது உப்புகளும் தோல் பாதுகாப்புக்கு உதவுகின்றன.
இதில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் பலவகையான புற்று நோய்களைத் தடுக்கின்றன.
வாய் துர்நாற்றத்தை போக்கவும், பல் ஈறுகளை பாதுகாக்கவும் வெள்ளரி உதவுகிறது.
ஜீரண மண்டலத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், குடல் புண்ணாகி அவற்றை குணமாக்கி சீரணத்துக்கு உதவுகிறது.
இதில் உள்ள வைட்டமின் ஏ, பி6, சி போலெட், கால்சியம் ,மக்னிசு, பொட்டாசியம் போன்றவை யூரிக் அமிலத்தின் அளவை குறைப்பதாலும் மூட்டு வலிக்கு நிவாரணம் கிடைக்கிறது.
இன்சுலினை சுரக்கும் கணைய செல்களுக்கு தேவைப்படும் ஹார்மோன் வெள்ளரியில் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
சிலிக்கானும், கந்தகமும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
கண் வீக்கம், கருவளையம் போக்கவும் சிறுநீர், சிறுநீரகக் கற்களை கரைக்கவும் வெள்ளரிக்காய் உதவுகிறது.
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை நீக்கவும் பயன்படுகிறது.
வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஆறு அவுன்ஸ் விதம் வெள்ளரிக்காய் சாறு அருந்தினால் புண் சட்டென குணமாகும்.
வெயில் பாதிப்பை தவிர்க்க தயிரில் வெள்ளரிக்காய், காரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி இவற்றை துருவி சேர்த்து வெஜிடபிள் சாலட் செய்து சாப்பிட்டால் குளிர்ச்சியாக இருக்கும்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்களை அகற்ற வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.
அதே நேரம் ஜீரண கோளாறு, கபம், இருமல், நுரையீரல் பிரச்சனை இருப்பவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும்.
பிரச்சனை தீர்ந்த பிறகு வெள்ளரிக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும்.