பயணத்தில் குறுக்கே பூனை
அது இடமிருந்து வலம் போனதா? வலம் இருந்து இடம் போனதா? கருப்பு பூனையா? அல்லது கொஞ்சம் வெள்ளை நிறம் கலந்த பூனையா? என்றெல்லாம் பார்த்து சகுனத்தை கணிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.
என்ன அர்த்தம் அது எங்கேயோ? போகிறது என்று அர்த்தம்.
ஆம் ! இது கிண்டல் அல்லது நகைச்சுவை பதில் அல்ல, இதுதான் எதார்த்தம்.
சாதாரணமாக பூனை எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது.
நீங்களும் எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறீர்கள்.
அவ்வளவுதான். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்களோ? அதை பொறுத்து உங்களுக்கு பலன் கிடைக்குமே தவிர, குறுக்கே செல்லும் பூனையால் அல்லது தலையை தொட்டுச் செல்லும் காகத்தால் எதுவும் மாறிவிடாது.
அமைதி வேண்டுமா ?
அமைதி வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.
போருக்கு செல்வதற்கு தயாராக இரு.
ஆம், இந்த பதிலும் எதிர்மறைப் பதில் அல்ல. இதுவே சரியான பதில்.
ஒருவர் போருக்கு செல்லும்போது எப்படிப்பட்ட மனநிலையில் இருக்க வேண்டும் தெரியுமா ?
எது நடந்தாலும் எ மனப்பக்குவம் இருக்க வேண்டும்..' &
அதாவது போரில், பிறர் உயிரை எடுக்க வேண்டி வரலாம். அல்லது தன் உயிரை இழக்க வேண்டி வரலாம்.
அப்படி தன்னையே இழப்பதற்கு ஒருவன் தயாராக இருந்தால் அவன் மனதில் அமைதி தானாகவே வந்துவிடும்.
சேமிப்பு இல்லையே!
என் எதிர்காலத்துக்கு போதுமான அளவு சேமிக்கவில்லையே? பிச்சைக்காரனாக மாறிவிடு .
ஆம், இந்த பதில் உன்னுடைய பயத்தை போக்குவதற்காக சொல்லப்படுகிறது.
பயமிருக்கும் ஒருவனுக்கு எவ்வளவு பணம் சேமிப்பாக இருந்தாலும் அதன் மீது நம்பிக்கை வராது.
நாளைக்கு பணம் கிடைக்குமா?
கிடைக்கும், பணம் போதுமான அளவில் இருக்குமா?
வயதான பிறகு வரும் நோய்க்கு இந்த படத்தால் சிகிச்சை தந்துவிட முடியுமா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டே பயத்துடன் வாழ்வார்கள் .
அவர்களால் சேமித்து வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு சந்தோசமாக வாழ முடியாது. எனவே பிச்சைக்காரன் வாழ்க்கைக்கு ஆசைப்பட வேண்டும்.
நாளை ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டு அந்த நம்பிக்கையில் தான் பணத்தின் மீதான பயத்தை குறைக்கும்.இது.
பணமின்றி உலகில் அத்தனை உயிரினங்களும் வாழத்தான் செய்கின்றன என்பதை நினைவில் கொள்