ஒரு பஸ் இரவு நேரத்தில் திருமண நிகழ்ச்சிக்காக சொந்த பந்தங்களை ஏற்றி க் கொண்டு திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை முகூர்த்தத்திற்கு சென்றுகொண்டிருந்தது......!!!
மிட்நைட்டில் டிரைவருக்கு தூக்கம் வந்தது அதனால் பஸ்ஸை ஒரு ஒருமணிநேரம் நிறுத்தி தூங்கிவிட்டு செல்லலாம் என்றார்......!!!
அதற்கு "காலை முகூர்த்தம் நேரமாகிவிடுமென்று யாரும் ஒத்துக்கொள்ளவில்லை....!!!!
" சரி அப்படியானால் ஓட்டத்தெரிந்த யாராவது ஓட்டுங்கள் நான் கொஞ்சநேரம் தூங்குகிறேன் என்றார் டிரைவர்....!!!
ஒருவர் தனக்கு ஓட்டத்தெரியும் எனக்கூறி அவரை தூங்கச்சொன்னார்...!!
டிரைவர் உட்பட அனைவரும் அசந்து தூங்கிவிட்டனர். விடிந்தும்விட்டது. ஆனால் பஸ் அதே இடத்தில்தான் இருந்தது....!!!
அந்த டிரைவருக்கு கடுமையான கோபம் "ஏப்பா உனக்கு ஓட்டத்தெரியும் என்று சொன்னதால்தானே ஓட்டச்சொன்னேன்!!!" இப்ப பஸ் அதே இடத்தில் நிற்குதே ஏன் என்றார்...!!!
அதற்கு அவர் கூலாக சொன்னார் "நான் ரோடு ரோலர் ஓட்டுகின்ற டிரைவருங்க...!!! கொஞ்சதூரம் முன்னாடி போவேன் திரும்பி அதே இடத்துக்கு வந்துடுவேன் என்றாராம்..