8 இருந்தால் நீங்களும் அழகாகலாம்

உங்களை அழகாக்கும் 8 பழக்கங்கள்

 நிறைய பேர் தங்களை அழகாக்கி கொள்ள ஏராளமான பணம் செலவழிக்கிறார்கள்.
 அதன் மூலம் வெளித்தோற்றம் மட்டுமே அழகாக மாறுகிறது.
 முதல் அறிமுகத்துக்கு வேண்டுமானால் இந்த மேக்கப் உதவலாம் ஆனால் அதன் பிறகு தொடர்ச்சியாக உங்களை மதித்து அன்பு செலுத்த சில பழக்கங்கள் அவசியம்.
 இந்த பழக்கங்கள் உங்கள் குணத்தை அழகாக்கும்.

 1. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் சர்ப்ரைசாக பரிசுகள் கொடுங்கள். அவர்கள் மன வேதனையில் இருக்கும் போது ஆறுதல் வார்த்தைகள் பேசுங்கள்." வாழ்க்கை நன்றாக போகும் போது அருகில் இருப்பவர்கள் ஒரு ரகம் என்றால் பிரச்சனைகளின் போது தோள் கொடுக்கும் வேறு ரகம் நான்" என்பதை உணர்த்துங்கள்.

2. உங்களால் செய்ய முடிகின்ற விஷயங்களை முடியும் என ஒப்புக்கொள்ளுங்கள். முடியாததை வெளிப்படையாக நிராகரித்து விடுங்கள். நண்பர் அல்லது உறவினரின் செயலில் உங்களுக்கு எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் அதை மனம் நோகாதபடி சொல்லுங்கள். அவர் மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் ஒன்று பேச மாட்டார் என பெயர் எடுங்கள்.
3. அறிமுகம் இல்லாத நபர்களுக்கும் அவசர நேரத்தில் உதவி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இரண்டு கைகளிலும் பைகளோடு வரும் நபருக்கு கதவை திறந்து விடுவது, படியாற முடியாமல் தவிக்கும் முதியவருக்கு கை கொடுத்து தூக்கி விடுவது, என உதவிகளே உங்களை உன்னதமாக அழகு படுத்தும்.

 4. நீங்கள் இருக்கும் துறையில் உங்களை விட சிறப்பானவர்கள் இருந்தால் அவர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள். அனுபவங்களையும், அறிவையும் பெறும் விஷயத்தில் ஈகோ பார்க்காதீர்கள். 

5.நான்கைந்து பேர் ஓரிடத்தில் இணைந்து பேசுவார்கள். சில நிமிடங்களில் அந்த உரையாடல் நின்று விடும். காரணம் அடுத்தவர்களுக்கு சுவாரசியம் ஏற்படுத்தும் படி பேசுவதற்கு அவர்களில் யாரிடமும் எந்த விஷயமும் இருக்காது. அப்படி இல்லாமல் அடுத்தவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்துகிற 10 புதிய விஷயங்களாவது உங்களால் பேச முடிந்தால் உங்களுடன் பழக எல்லாருமே ஆர்வம் கேட்டுவார்கள். அதற்காக உலக நிகழ்வுகளை தெரிந்து வைத்திருங்கள் டெக்னாலஜி முதல் உடற்பயிற்சி வரை எதைப் பற்றியும் லேட்டஸ்ட் விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்.

6. தெரிந்த நபர்களிடம் சுலபமாக பேசிவிடலாம். அறிமுகம் இல்லாத புது மனிதர்களிடம் உரையாடலை தொடங்கி,அதை தொடர்வது பெரிய சவால். அவருக்கு எது சுவாரஸ்யம் தருகிறது என்பதை சில நிமிடங்களில் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றபடி பேச வேண்டும். அந்தக் கலையை பழகிக்கொள்ளுங்கள்.
7. தேங்க்ஸ் இந்த உலகில் அதிகம் பேசப்பட்ட வார்த்தையாக இது இருக்கக்கூடும். ஆனாலும் இந்த வார்த்தைக்கு இருக்கும் சக்தி மகத்தானது யார் உங்களுக்கு என்ன உதவி செய்தாலும் மறக்காமல் நன்றி சொல்லி பழகுங்கள்.

8. எதை இழந்தாலும் திரும்ப சம்பாதித்து விடலாம். நேரத்தை இழந்தால் அதை திரும்ப பெற முடியாது. நேரத்தை திட்டமிட்டு செலவளியுங்கள் படித்தாலும் அனுபவிங்களாலும் உங்களை மேம்படுத்திக் கொள்ள தினமும் கொஞ்சம் நேரம் செலவிடுங்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை