CA அப்படினா பெரிய படிப்போ?


”ஆக்சுவலா CA ங்கிற 

Chartered Accountant படிப்புன்னா 
என்ன? "

 நான் புரிந்து கொண்டதில் கொஞ்சம் கூடுதல் குறைவு இருக்கலாம். 

ஆனால் எசென்ஸ் இதுதான். 

சி.ஏ வின் மொத்தம் நான்கு கட்டங்கள் உள்ளன. 

கட்டம் ஒன்று - Foundation Course 
கட்டம் இரண்டு - Intermediate Course 
கட்டம் மூன்று - ஒரு அனுபவம் வாய்ந்த Chartered Accountant யிடம் பயிற்சியாளாராக சேர்ந்து பணியாற்றுவது. 
கட்டம் நான்கு - Final Exams

கட்டம் ஒன்று - Foundation Course 

சி.ஏ படிப்புக்குள் காலடி வைக்கும் மாணவர்கள் முதன் முதலில் எழுத கூடிய தேர்வுகள் அடங்கிய தொகுப்பைத்தான் Foundation Course என்கிறார்கள். 

இதில் நான்கு பேப்பர்கள் வருகின்றன. 

1. Accountancy - 100 மார்க் - எழுத்து தேர்வு 
2. Law & English - 100 மார்க் - எழுத்து தேர்வு 
3. Maths - 100 மார்க். - நான்கு விடைகளில் விடை கண்டுபிடி தேர்வு (MCQ)
4. Economics and commerce - 100 மார்க். - நான்கு விடைகளில் விடை கண்டுபிடி தேர்வு (MCQ)

 Accountancy மற்றும் Law & English தேர்வுகளை எழுத வேண்டும். கேள்வி பதில் டைப் தேர்வு இது. இதில் Negative மதிப்பெண்கள் கிடையாது. 

Maths மற்றும் Economics & commerce தேர்வுகள் Multiple Choice Question அதாவது நான்கு விடைகளில் சரியான விடைகள் கண்டுபிடிக்கும் தேர்வாகும்.

இத்தேர்வுகளில் Negative மதிப்பெண்கள் உண்டு. நீங்கள் ஒரு கேள்வியை தவறாக எழுதி விட்டால் 0.5 மதிப்பெண் அதாவது அரைமதிப்பெண் கழித்து விடுவார்கள். 

இந்த நான்கு பேப்பர்களும் ஒவ்வொரு பேப்பருக்கும் பாஸ் மதிப்பெண் 40 ஆகும். 

நூற்றுக்கு நாற்பது மார்க் எழுதினால் பாஸாகிவிடலாம். 

சரி நான்கு பாடங்களில் ஒரு மாணவர் 40 + 40 + 40 + 40 எடுத்து 160 மார்க் எடுத்து பாஸ் ஆனால் அது செல்லுமா ? 

செல்லாது. நான்கு பாடங்களிலும் சேர்த்து ஒரு மாணவர் மொத்தமாக 200 மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். 

இன்னொரு விஷயம் நான்கு பாடங்களை செமஸ்டர் செமஸ்டராக அரியர் க்ளியர் செய்வது போல செய்ய முடியாது. 

ஒரு பாடத்தில் பெயிலானாலும் மறுபடி நான்கையும் சேர்த்துதான் எழுத வேண்டும். 

ஆக CA படிப்பு Foundation Course களில் மூன்று சவால்கள் இருக்கின்றன. 

சவால் ஒன்று - ஒரு பாடம் பெயிலானாலும் நான்கையும் சேர்த்துதான் எழுத வேண்டும். ஒவ்வொன்றாக க்ளியர் செய்ய முடியாது. 

சவால் இரண்டு : நான்கு பாடங்களில் பாஸ் ஆனால் மட்டும் போதாது. ஒட்டு மொத்தமாக நான்கு பாடங்களிலும் சேர்த்து 200 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 

சவால் மூன்று : நான்கு பாடங்களில் இரண்டு பாடங்களுக்கு நெகட்டிவ் மார்க்ஸ் உண்டு. 

இந்த மூன்று சவால்களையும் ஒரு மாணவர் கடக்கும் போதுதான் அவர் Foundation Course யில் பாஸ் ஆகிறார். 

உண்மையில் Foundation Course க்ளியர் செய்வது பெரிய சவால்தான். ஆனால் செய்து முடிக்க முடியாத சவால் அல்ல. செய்து முடிக்க கூடியதே அது. 

கட்டம் இரண்டு - Intermediate Course 

இதில் இரண்டு குரூப்கள் இருக்கின்றன. 

Group 1 - எட்டு பாடங்கள். 

Group 2 - எட்டு பாடங்கள். 

Group 1 வும் மொத்தமாக பாஸ் ஆக வேண்டும். 
Group 2 வும் மொத்தமாக பாஸ் ஆக வேண்டும்.

ஆனால் Group 1 ம் Group 2 ம் ஒரே சமயத்தில் பாஸ் ஆக வேண்டும் என்ற விதி இல்லை. 

கட்டம் மூன்று - ஒரு அனுபவம் வாய்ந்த Chartered Accountant யிடம் பயிற்சியாளாராக சேர்ந்து பணியாற்றுவது. 

Foundation மற்றும் Intermediate க்ளியர் செய்த பிறகு ஒரு தகுதிவாய்ந்த Chartered Accountant யிடம் பயிற்சியாளாராக சேர்ந்து பணியாற்ற வேண்டுமாம்.  அங்கு மாணவர் என்ன வேலை செய்கிறார் என்பதற்கான ஆதாரங்களை அவர் சரியாக சமர்ப்பிக்க வேண்டும். 

குறைந்தது இந்த பிரீயட் எட்டு மாதங்களில் இருந்து ஒருவருடம் பணியாற்றி இருக்க வேண்டும். 

ஆனால் பொதுவாக இந்த கட்டத்திலேயே மாணவர்கள் Chartered Accountant தகுதியைப் பெற்று விடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். ஒருவருடம் என்றில்லாமல் அந்த தகுதி வாய்ந்தவரிடம் கால எல்லையின்றி பணியாற்றியபடியே Final தேர்வுகள் எழுதுகிறார்கள்.
கட்டம் நான்கு - Final Exams 

இதிலும் Group 1 வில் எட்டு பேப்பர்கள். 
Group 2 வில் எட்டு பேப்பர்கள். 

ஒவ்வொரு குரூப்பாக மொத்தமாக எழுதி பாஸ் ஆகிக் கொள்ளலாம். 

இதிலும் அனைத்து பேப்பர்களை க்ளியர் செய்தால் அவர் ஒரு முழுமையான Chartered Accountant தகுதி பெறுகிறார். 

ஒரு காலத்தில் மருத்துவப்படிப்புகளை ஒரு சில சாதியினரே அவர்கள் கையில் வைத்திருந்தார்கள். 

இப்போது அனைத்து சாதியினரும் படிக்கிறார்கள். 

ஒரு காலத்தில் வக்கீல் படிப்பை ஒரு சில சாதியினரே அவர்கள் கையில் வைத்திருந்தார்கள். 

இப்போது அனைத்து சாதியினரும் படிக்கிறார்கள். 

அது போல Chartered Accountant படிப்பிலும் அனைத்து சாதியினரும் படித்து வர வேண்டும். 

அப்படி படிக்க ஆரம்பகட்டமாக அந்த படிப்பின் தேர்வு முறைகள் தெரிந்திருக்க வேண்டும். 

சிஏ என்றால் ஏதோ ரொம்ப கடினமானது. அதை எல்லாம் படிக்கவே முடியாது என்று மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு “நமக்கெல்லாம் அது வராதுப்பா” என்று அதை முயற்சி செய்யாமலே இருப்பது தவறான அனுகுமுறையாகும்.

சிஏ கடினபடிப்பென்றால் ஏன் கடினபடிப்பு ? எப்படி கடினபடிப்பு ? அதை படிக்க எந்த மாதிரியான உழைப்பு வேண்டும்? எந்த எந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கொஞ்சம் விவரமாக தெரிந்து கொள்வதுதான் சரியான அனுகுமுறையாகும்.

அப்படி லோயர் மிடில் க்ளாஸ் குடும்பங்களில் CA பற்றிய ஆரம்ப அறிவைப் பெற்று அதை அடுத்த அடுத்த தலைமுறைக்கு கடத்துவது என்பதுதான் CA படிப்பை அனைத்து சாதியினரும் படித்து சமத்துவம் ஏற்பட வழிவகுக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை