சிறு தானியங்களின் பயன்கள்
சிறுதானியங்களான கம்பு, சோளம், வரகு, சாமை , திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவையே சிறு தானிய உணவுகளாகும்.
இதனை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் .
இவை அதிக ஆற்றலை தரக்கூடியவை.
தினமும் சிறு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
குறிப்பாக உடல் பருமன், ரத்தத்தில் கொழுப்பு பிரச்சனைகள் உள்ளோர் சிறு தானியங்களை அதிகம் பயன்படுத்தலாம் .
அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்ததும் .
பைடிக் அமிலம் குறைந்ததும் .
இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டதாகவும் உள்ளன.
இதில் ஒவ்வொரு தானியத்திலும் ஒவ்வொரு பலன் நிறைந்திருக்கிறது