வெயிலில் தாக்கத்திலும் ஆரோக்கியமாக வாழலாம்
சுட்டெரிக்கும் சூரியன் உடன் கடுமையான கோடை காலம் தொடங்கிவிட்டது.
இந்த காலத்தில் நமது உடலை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும் .
எனவே இந்த கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க பல்வேறு விஷயங்கள் உள்ளன.
அவற்றை பின்பற்றினால் நாம் ஆரோக்கியமாக கோடை காலத்தை கடக்க முடியும் .
உடலில் நீர்ச்சத்து அவசியம்.
கோடை அனலை சமாளிக்க உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .
தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதில்லை.
போதுமான இடைவெளியில் தொடர்ந்து நிறைய தண்ணீர் குடிப்பது இந்த காலத்தில் மிகவும் நல்லது .
அதிக சர்க்கரை நிறைந்த குளிர் பானங்கள் மற்றும் ஆல்கஹால் போன்றவை நீரில் நீரிழப்பு வழிவகுக்கும் பானங்களை குடிப்பது தவிர்க்கவும்.
உடலில் நீர்ச்சத்து சமநிலையில் இருப்பதற்கு எப்போதும் தண்ணீர் பாட்டிலை நீங்கள் செல்லும் இடங்களுக்கு கொண்டு செல்வது மிகவும் நல்லது.
உங்கள் எடைக்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று குடிப்பது நல்லது.
சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் குறைந்தபட்சம் spf 30 மூலக்கூறு கொண்ட சன் ஸ்கிரீன் லோசன் பூசி கொள்வதன் மூலம் உங்கள் சருமத்தை பாதுகாத்துக் கொள்ளவும்.
இந்த லோசனை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை உடலில் சூரிய ஒளிபடும் இடங்களில் தடவ வேண்டும் .
குறிப்பாக நீங்கள் நீச்சல் பயிற்சி செய்தாலோ அல்லது உங்கள் உடலில் வியர்வை ஏற்பட்டாலோ இதை அவசியம் தடவிக் கொள்வது நல்லது .
பொருத்தமான ஆடைகள் அணியவும்.
சூரிய கதிர்களை பிரதிபலிக்கும் வகையில் வெள்ளீர் நிறங்களில் பருத்தி போன்ற தளர்வான ஆடைகளை தேர்வு செய்வது நல்லது.
அடர் நிறம் கொண்ட இறுக்கமான ஆடைகள் உங்கள் உடல் வெப்பத்தை மேலும் அதிகரிக்கும் .
இதனால் வெப்பம் தொடர்பான பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.