சிறிய வீட்டை பெரிய வீடு போல மாற்றலாம்

சிறிய வீட்டை பெரிய வீடு போல மாற்றலாம் 

எல்லோருக்கும் மாளிகை போன்ற வீட்டில் வசிக்க ஆசை.

 ஆனால் அதிகரித்து வரும் மலை போன்ற விலை, கட்டுமான செலவு அதிகரிப்பு காரணமாக பலருக்கும் இந்த கனவு நனவாகுவதில்லை.

 ஆனாலும் கூட இருக்கிற சிறிய இடத்தில் தங்கள் பண பலத்துக்கு ஏற்ப கூடுமானவரை வசதிகள் கொண்ட வீட்டை கட்டிக்கொள்ள முயல்கிறார்கள்.

 நீங்களும் உங்கள் சிறிய வீட்டை பெரிய வீடு போல மாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அதற்கு இதோ சில டிப்ஸ்:

 வீட்டின் உட்புறம் வெள்ளை வண்ணம் பூசுவது நல்லது.

 இது பிரகாசமான நிறம்.

 உங்கள் வீட்டுக்கு தனித்த அழகை கொடுக்கும்.

 அதிக ஒளியை பிரதிபலிக்கும்.

 வெள்ளை வண்ணம் நமது ஆழமான, தூய்மையான உணர்வுடன் தொடர்புடையது .

வீட்டின் உட்புறம் வெள்ளை வண்ணம் பூசும்போது அது விசாலமாக காட்சியளிக்கும்.

 வெள்ளை வண்ணத்துடன் வேறு வண்ணங்களையும் பூசலாம்.

 ஆனால் அதில் ஒன்று வெள்ளையாகவும் மற்றொன்று கருமையாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

 சுவர்களுக்கு வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்து வேறு நிறத்தில் அலங்கரித்தால் அறையில் சிறப்பு அம்சம் அதிகமாகும் .

அதற்கு நீங்கள் அடர் சாம்பல் அல்லது பழுப்பு, சிவப்பு போன்ற வண்ணங்களை தேர்வு செய்யலாம்.

 வீட்டில் உட்புறம் காலியாக இருந்தால் சாதாரணமாக காட்சியளிக்கும்.

 எனவே அதற்கு ஏற்ப உள் அலங்காரம் செய்திடுங்கள்.

 அறைகலன்களை வாங்கி போடுங்கள்.

 சோபாக்கள், நாற்காலிகள் அல்லது மேசைகளை வாங்கும்போது அதன் கால்கள் குட்டையாக மெல்லியதாக உள்ளதா என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

 தற்போது பல அடுக்கு படுக்கை வசதி வந்து விட்டது.

 இவை அறையில் அதிக இடத்தை அடைத்துக் கொள்ளாது.

 குறிப்பாக குழந்தைகளுக்கான அறையில் இவ்வாறு அமைக்கலாம்.

 வீட்டினுள் ஆங்காங்கே கண்ணாடிகளைக் கொண்டு அலங்காரம் செய்யலாம்.

 கண்ணாடிகள் ஒளியை பிரதிபலிப்பதால் வீடு பிரகாசமாக இருக்கும்.

 பெரியதாகவும் தோன்ற வைக்கும்.

 தரையில் இருந்து அறையில் கூரை வரை ஜன்னல்கள் இருந்தால் வெளி காட்சி தெளிவாக இருக்கும் .

இந்த ஜன்னல்கள் வீட்டுக்கு தனி அழகை தருகின்றன.

 இந்த ஜன்னல்களும் ஏற்ப கூரையிலிருந்து தரை வரை திரைச்சீலர்களை தொங்க விடுவது நல்லது.

 இதனால் அறை நன்கு உயரமாக தோன்றும் .

அறையை அதிக காற்றோட்டமாக மாற்ற லேசான துணி திரைச்சீலைகளை பயன்படுத்தவும்.

 வீட்டுக்குள் பிரம்மாண்ட பொருட்கள் அடித்து கொண்டிருப்பது போல இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

 அத்தகைய பொருட்களை லாப்ட்டிலும் கட்டிலுக்கு கீழவும் தள்ளி விடுங்கள்.

 ஹாலுடன் இணைந்தது போன்ற திறந்த சமையலறை பெரிய வீட்டுத் தோற்றத்தை கொடுக்கும் .

மிகவும் நவீனமாகவும் தோன்றும்.

 சிறிய வீடுகளுக்கு ஏற்ப பொருத்தமான உள் அலங்காரத்தை செய்வதுடன் சிறிய தொட்டில் களில் செடிகளையும் ஆங்காங்கே வைக்கலாம்.

 இது எல்லாம் சேர்ந்து சிறிய வீட்டில் வசிக்கும் உணர்வை உங்களிடம் இருந்து அகற்றி விடும்.
 உங்கள் வீட்டுக்கு வரும் உங்களை வியந்து பாராட்டுவார்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை