டீ - யை சூடுபடுத்தி குடிக்கலாமா?
டீ பிரியர்கள் அவ்வப்போது டீயை விரும்பி அருந்துவார்கள்.
அது உற்சாகம் தருவதாக உணர்வார்கள்.
ஏற்கனவே தயாரித்த டீயை மீண்டும் சூடு படுத்தி குடிப்பதும் சிலரின் வழக்கம். அவ்வாறு மறுபடியும் டீயை சூடு படுத்தி குடிப்பது நல்லதா? இது தொடர்பாக நிபுணர்கள் கூறுவது:
டீயை மீண்டும் சூடு படுத்துவது இரும்பு சத்து குறைபாடுக்கு வழிவகுக்கும்.
டீத்தூளில் டானின்கள் உள்ளன.
டீக்கு அதன் தனித்துவமான நிறத்தையும் சுவையும் தருவது இதுதான்.
டீயை மீண்டும் சூடு படுத்துவது டானின் சரிவை அதிகரிக்கிறது.
மற்ற உணவுகளில் இருந்து ஊட்டச்சத்தை உடல் கிரகிப்பதை பாதிக்கிறது .
இரும்பு உறிஞ்சுதலை 30 முதல் 40 சதவீதம் குறைகிறது .
இது இரும்பு சத்து குறைபாட்டுக்கு வழிவகுக்கும்.
மீண்டும் சூடுபடுத்த டீ அமிலத்தன்மை மற்றும் வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதிக நேரம் குறிப்பாக பாலுடன் கொதிக்க வைப்பது அமிலத்தன்மையை அதிகரிக்கிறது.
இது நெஞ்செரிச்சல், அமில ரிப்ளக்ஸ் மற்றும் வயிறு அசெளகரியத்தை பாதிக்கிறது .
பால் இல்லாத டீ அல்லது லாக்டோஸ் இல்லாத மாற்றங்களை பயன்படுத்தலாம் .
புதிதாக டீ தயாரிப்பதற்கு டீத்தூளை மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் மட்டுமே கொதிக்க வைக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதிக அளவில் இருந்தால் மட்டுமே நீண்ட நேரம் கொதிக்க வைக்கவும்.
பின்னர் பால் சேர்க்கவும்.
மாறாக கெமோமில் மூலிகை அல்லது செம்பருத்தி டீயை தயாரித்து அருந்தலாம்.