மளிகை பொருட்களை கெட்டு போகாமல் வைக்கலாமே!

மளிகை பொருட்கள் கெடாமல் பாதுகாக்க வழிகள் 
மாதந்தோறும் மளிகை பொருட்கள் வாங்குவதைவிட விலை குறைவாக இருக்கும் சமயங்களில் இரண்டு மூன்று மாதங்களுக்கு சேர்த்து மொத்தமாக வாங்குவது சிலரின் பழக்கமாகும்.

 இதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

 அவ்வாறு வாங்கும் மளிகை பொருட்களை சரியாக பாதுகாக்கா விடில் புழு, வண்டு போன்றவற்றால் சேதம் ஏற்படும்.

 மளிகை பொருட்கள் வீணாகுவதை தவிர்ப்பதற்கு சில எளிய வழிகள்
 இதோ:

 பருப்பு வகைகள் 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு வகைகளை பாக்கெட்டில் இருந்து நேரடியாக அதற்கான பாத்திரங்களில் கெடாமல் சில நேரம் வெயிலில் உலர வைக்க வேண்டும்.

 வெயிலில் உலர்த்தும் வசதி இல்லாதவர்கள் பருப்பை வெறும் வாணலியில் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வறுத்து ஆறவைத்து பின்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கலாம்.

 துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவில் பிரியாணி இலை அல்லது சிறிய துண்டு வசம்பை உடன் சேர்த்து வைக்கலாம்.

 பாசிப்பருப்பு இருக்கும் டப்பாவில் ஒரு காய்ந்த மிளகாய் போட்டு வைக்கலாம்.

அரிசி

 அரிசி மூட்டையாக வாங்கி வைக்கும் அரிசியில் புழு பூச்சிகள் பாதிப்பால் எளிதில் வீணாகிவிடும் .

அரிசியை கொட்டி வைத்திருக்கும் பாத்திரத்தில் பிரியாணி இலை மற்றும் வசம்பை இடையே போட்டு வைத்தால் பல மாதங்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் .

மாவு வகைகள் 

அரிசி, மைதா, கோதுமை உள்ளிட்ட மாவு வகைகளை ஈரமில்லாத காற்று போகாத டப்பாவில் சேமித்து வைக்க வேண்டும்.

 இதில் காய்ந்த மிளகாய் பிரியாணி இலைகளை போட்டு வைத்தால் பூச்சிகள் வராமல் தவிர்க்கலாம்.

 ரவை 

ரவையை வறுத்து ஆறவைத்த பின்பு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும்.

 அதில் பிரியாணி இலைகள் போட்டு காற்று போகாதவாறு இறுக்கமாக மூடி வைத்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும் .

சர்க்கரை

சர்க்கரை போட்டு வைத்திருக்கும் டப்பாவில் எளிதில் எறும்புகள் வந்துவிடும் .

மேலும் டப்பாவில் காற்று புகுந்தால் சர்க்கரை நீர்த்துவிடும்.

 இதை தவிர்ப்பதற்கு இரண்டு, மூன்று கிராம் மற்றும் ஒரு துண்டு லவங்கப்பட்டையை போட்டு வைக்கலாம்.

 மசாலா பொருட்கள்

ரசப்பொடி, சாம்பார் பொடி, மிளகாய் பொடி போன்றவற்றை வீட்டில் அரைத்து பாதுகாத்து வைப்பார்கள்.

 தனியா தூளை அதிக அளவில் அரைக்கும் போது சூடு ஆறியதும் அதில் சிறிது தூள்  உப்பை கலந்து வைக்கலாம்.

 இதன் மூலம் அவற்றில் பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.

 மசாலா பொருட்கள் அரைத்து சேமித்து வைத்திருக்கும் பாத்திரங்களில் காம்புடன் இருக்கும் காய்ந்த மிளகாய் போட்டு வைக்கலாம்.
 சிறிதளவு கட்டி பெருங்காயத்தை ஒரு துணியில் பொதிந்து மிளகாய் பொடி வைத்திருக்கும் டப்பாவில் போட்டு வைப்பதன் மூலம் வண்டு வராமல் தடுக்கலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை