உடலைக் காக்கும் இரும்பு சத்து
இரும்பு சத்து குறைபாடு என்பது உலகம் முழுவதும் மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடாக கருதப்படுகிறது.
உலக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் இரும்புச்சத்து குறைபாட்டினால் ரத்த சோகை பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
பொதுவாக உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இரும்பு சத்து தேவைப்படுகிறது.
ரத்தத்தில் பிராணவாயுவை கடத்துவதற்கு இரும்புச்சத்து முக்கிய தேவையாகும் .
அன்றாட வாழ்வில் உடல் சோர்வு இன்றி இயங்க இரும்புச்சத்து அவசியம் .
உண்ணும் உணவில் போதிய அளவு இரும்பு சத்து இல்லாத போது உடலில் உள்ள இரும்புச்சத்து குறைந்து விடும்.
இது உடலை சோர்வுயடைய செய்வது, நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து ரத்த சோகைக்கு வழி வகுக்கும்.
உடலில் இரும்பு சத்து குறைபாட்டின் அறிகுறிகள் :
ரத்த பரிசோதனை செய்யும் பெரும்பாலமான மக்களுக்கு தெரிவதில்லை .
பொதுவாக மிகுந்த சோர்வு, கண்ணுக்கு கீழ் கருவளையம், மூச்சுத் திணறல் ,முடி உதிர்தல், வெளிர்த்தோல் கால்களில் ஒரு கூச்ச உணர்வு, தலைவலி ,தலைசுற்றல், கை கால்களில் குளிர்ந்த உணர்வு, வேகமான இதய துடிப்பு , கவலை உணர்வு , நாக்கு, வாய் வீக்கம், எளிதாக உடையும் நகங்கள் ஆகிய அறிகுறிகள் உடலில் இரும்புச் சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது.
இரும்பு சத்து குறைபாட்டால் கடுமையான மறதி மற்றும் தூக்கத்தன்மை இருந்து கொண்டே இருக்கும் படி ஏற முடியாது மூச்சுத் திணறல் ஏற்படும்.
இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு தீவிரமான நிலைகளில் இதய தாக்குதல் வரை ஏற்படும் எனவே இரும்புச் சத்தை கவனியுங்கள்.
அருமை 👌💐💐
பதிலளிநீக்கு