குளிர்காலத்தில் சைனஸ் பிரச்சனையை கட்டுப்படுத்த
சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு குளிர் காலம் தொந்தரவான காலமாகும்.
இக்காலத்தில் மூக்கடைப்பு , முகத்தில் வலி, அழுத்தம், தலை வலி போன்ற பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும்.
அதை தவிர்க்கும் வழிகளை அறிந்து கொள்ளுங்கள்.
சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் குளிர்காலத்தில் தினமும் ஆவி பிடித்து தலை, மூக்கில் இருக்கும் சளி கொஞ்சும் கொஞ்சமாக நிறுத்தி வெளியேறும்.
சைனஸ் பிரச்சனை உள்ளோர் குளிர் காலத்தில் நீர் ஏற்றமாக இருக்க வேண்டும் .
எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் .
அதிலும் குறிப்பாக சூடான நீரை குடித்து வந்தால் சளி பிடிக்காது.
இதனால் சைனஸ் பிரச்சனையும் வராது.
இது தவிர சூடான நீரில் குளிப்பதும் நல்லது .
குளிர்காலத்தில் வீட்டில் போதுமான அளவு வெளிச்சம் மற்றும் காற்று இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் .
அதுபோல வீட்டில் தூசி படர்ந்தால் அதனை உடனுக்குடன் அகற்றி விடுங்கள்.
சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் இரவில் நன்றாக தூங்கினால் இந்த பிரச்சனை குறையும் .
அதேபோல தூங்கும் போது உயரமான தலையணையை பயன்படுத்தலாம்.
சைனஸ் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் குளிர்காலத்தில் உணவில் பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காரணம் பூண்டு சளியை நீக்கி சைனஸ் பிரச்சனையை குறைக்கும்.
தினமும் இரண்டு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் அலர்ஜி குறையும் .
குளிர்காலத்தில் சைனஸ் பிரச்சனை வராமல் தடுக்க தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடவும்.
இஞ்சியில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் சைனஸ் பிரச்சனையை கட்டுப்படுத்தும்.
பயனுள்ள தகவல் 👌💐
பதிலளிநீக்கு