அவசர அவசரமாக சாப்பிடலாமா?
இன்றைய அவசர கதி வாழ்க்கையில் ஆற அமர அமர்ந்து சாப்பிட பலருக்கும் நேரம் இருப்பதில்லை. இதனால் அவசர அவசரமாக உணவை அருந்திவிட்டு அடுத்த வேலையை நோக்கி ஓடுகின்றனர்.
இப்படி அவசர அவசரமாக உணவை உண்பது உடலுக்கு பலவித தீங்குகளை விளைவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்னவென்று பார்ப்போம்:
நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உணவில் இருந்து தான் கிடைக்கிறது .எனவே அந்த உணவை நிதானமாகவும், ஆரோக்கியமான உணவாகவும் சாப்பிட வேண்டியது அவசியமாகும்.
ஆனால் அதற்கான நேரம் நமக்கு கிடைப்பதில்லை.
எனவே அவசரமாக சாப்பிடுவதும், நேரத்திற்கு சாப்பிட முடியாமல் போவதும் தற்போது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது .
உண்மையில் அப்படி சாப்பிடுவது உடலுக்கு தீங்கு தான் விளைவிக்கும்.
உதாரணமாக வயிறு உப்புதல் ,வாய் துர்நாற்றம், மலச்சிக்கல் ,நாக்கில் மாவு படிதல், செரிமான கோளாறு, நெஞ்செரிச்சல் உண்ட மயக்கம் இது போன்ற விளைவுகள் அவசர அவசரமாக சாப்பிடுவதால் மட்டுமே ஏற்படுகிறது.
ஏனென்றால் இந்த உணவுகள் எளிதில் செரிமானம் ஆகாமல் நிறைய நேரம் எடுத்துக் கொள்வதால் இந்த வகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது.
எனவே உணவு உண்பதற்கு சிறிது நேரத்தை கட்டாயமாக ஒதுக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் சாப்பிடும் போது கீழே உட்கார்ந்து சம்மணம் போட்டு பொறுமையாக , நிதானமாக வாயில் அசை போட்டு தான் சாப்பிட வேண்டும்.
உதாரணத்துக்கு நாம் பிரியாணியை எப்படி நிதானமாக ரசித்து ருசித்து சாப்பிடுகின்றோமோ அதே போன்று சாப்பிட வேண்டும் .
ஏனென்றால் வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகளில் முக்கியமான ஒன்று உடல் பருமன் ஆகும் .
விரைவாக சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்த உதவும்.
அதே சமயம் உடல் ஹார்மோன்களை சீர்குலைத்து பிரச்சனைகளை ஏற்படுத்தும் .
வேகமாக சாப்பிடுபவர்களுக்கு இன்சுலின் பாதிப்பு ஏற்படும்.
உடல் இன்சுலினை திறம்பட பயன்படுத்த தவறிவிடும்.
இதனால் சர்க்கரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு .
வேகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களுக்கு விரைவில் வளர்சிதை மாற்ற நோய் ஏற்படும்.
குறிப்பாக வேகமாக சாப்பிடுபவர்களுக்கு நல்ல கொழுப்பு எனப்படும் ஹச் டி எல் கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகும்.
இதனால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது .
வேகமாக சாப்பிடுவது இரைப்பை அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இதனால் உடல் வீக்கம், கடுமையான வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
வேகமாக உணவு சாப்பிட உள்ளவர்கள் உணவை சாப்பிடுவதில்லை .
மாறாக முழுங்கவே செய்கிறார்கள்.
இதனால் மூச்சுக் குழல் அடைப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.