பாதங்கள் பளபளக்க

பாதங்கள் பளபளக்க

1. ஒரு பக்கெட்டில் மிதமான சுடுநீரை எடுத்து அதில் 10 மில்லி டெட் ஆயிலும், 20 மில்லி சாம்பூ கலந்து நன்றாக கலக்குங்கள்.

 பின்பு அதில் பத்து நிமிடம் பாதங்களை அழுத்தி வையுங்கள்.

 இவ்வாறு செய்த கால் பாதங்களில் உள்ள அழுக்குகளும் , கிருமிகளும் நீக்கப்படுவதோடு பாதங்களில் அழகு கூடுகிறது.

 2. மசாஜ் கிரீம் அல்லது மாய்ஸ்சூரைசிங் லோஷன் கொண்டு பாதத்திலிருந்து கெண்டக்கால்  வரை மசாஜ் செய்து வருவது பாதங்களுக்கு அழகு சேர்க்கும் .

3. பஞ்சு, நெயில் பாலிஷ் ரிமூவர் இரண்டையும் கைகளில் கொண்டு ரிமூவரில் பஞ்சை நினைத்து கால் நகங்களில் தடவி வெயில் பாலிசி நீக்குங்கள் .

நகத்தை சீராக வெட்டுங்கள்.

 நகத்தை தசை பாகம் வரை வெட்டக்கூடாது .

வெட்டினால் நகத்தின் அழகு மறைந்து குழி நகம் உருவாகிவிடும்.

 நகங்களை வெட்டியதும் மெதுவாக சரி செய்ய வேண்டும்.

 4. நெயில் பாலிஷ் போடுவதற்கு முன்னால் ஒவ்வொரு விரலுக்கும் இடையில் பஞ்சை வைத்துக் கொள்ளுங்கள் .

நகத்தில் கோட்டிங் அடித்து விட்டு தேவையான கலரில் நக பாலிஷ் போடுங்கள் .

இரண்டு அல்லது மூன்று தடவை நகத்திற்கு பாலிஷ் பூசலாம் .

முடிந்ததும் அதற்கு மேல் ஒரு தடவை கோட்டிங் செய்யுங்கள்.

 பாலிஷ் பளிச்சென்று மின்னும்.

 5. வாஸ்லினை எடுத்து கால்களில் முழுவதும் தடவவும். அது கால்களுக்கு மிணுமிணுப்பு தரும்.

 கால்கள் மென்மையாக இருக்கும்.
 6. தினமும் உறங்க செல்லும் முன் கால்களில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி மசாஜ் செய்து விட்டு காலையில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால் கால் வலி, மூட்டு வலி இல்லாமல் நம் கால்களை பாதுகாக்கலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை