ஜாதிக்காய் நன்மைகள்

ஜாதிக்காய் நன்மைகள்
ஜாதிக்காய் கொட்டை, ஜாதிக்காயின் விதையை சுற்றி இருக்கும் சிவப்பு நிறமான பூ , அதன் மேலோடு என அனைத்தும் உணவிலும் , மருந்து பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.

 ஜாதிக்கையின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம்:

 ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் மேசின் என்ற வேதிப்பொருள் மருந்துகள், வாசனை திரவங்கள், முகப்புச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களிலும் பயன்படுகிறது.

 ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து முகத்தில் பூசி வர முகப்பரு, கரும்புள்ளிகள், தழும்புகள் நீங்கும்.

 ஜாதிக்காயை இடித்து நன்றாக பொடி செய்து கொண்டு ஒரு ஸ்பூன் பொடியை 100 மில்லி தயிரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எந்த விதமான பேதியானாலும் உடனே கட்டுப்படும் .

தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட அறவே பேதி நின்றுவிடும் .

கருவுற்ற காலத்தில் தாய்மார்களுக்கு உண்டாகும் மசக்கை வாந்திக்கு ஜாதிக்காய் சூரணத்தை வேளைக்கு அரை ஸ்பூன் வீதம் காலை, மாலை இரண்டு வேளை உணவுக்கு பின் தேன்குலைத்து சாப்பிட்டால் மசக்கை வாந்தி நிற்கும்.

 ஜாதிக்காய் பொடியை தினசரி இரவு படுக்கும் முன் அரை ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் பசும் பாலுடன் சாப்பிட்டு வர நல்ல தூக்கம் வருவதுடன் மறுநாள் காலை புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

 ஜாதிக்காயை நல்ல தண்ணீரில் சந்தனம் இழைப்பது போன்று உரைத்து தினசரி இரவு படுக்கும் முன் கண் இமைகளின் மீது லேசாக பூசி படுக்க கண் நோய்கள் குணமாகும்.

 கண் பார்வைத் திறன் அதிகரிக்கும்.

 நன்றாக தூக்கம் வரும்.

 ஜாதிக்காயை வெற்றிலை பாக்குடன் சேர்த்து உபயோகிக்க உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும் .

வாய் நாற்றம் நீங்கும்.

 ஜாதிக்காய் பொடியுடன் நெல்லிக்காய் சாறு கலந்து பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதி, இதயத்துடிப்பு , படபடப்பு குணமாகும்.
 பலருக்கு வாயு தொல்லை இருந்து கொண்டே இருக்கும். சீரணம் ஆகாது. பசி இருக்காது .மலச்சிக்கலும் இருந்து கொண்டே இருக்கும் இவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குவது ஜாதிக்காய்.

கருத்துரையிடுக

புதியது பழையவை