பெண்களை அதிகம் பாதிக்கும் நீர்க்கட்டி அலர்ஜி
சிறுநீர்ப்பையின் தசைகளில் ஏற்படும் நாள்பட்ட அலர்ஜியால் சிறுநீர்ப்பையில் அழுத்தம், வலி, இடுப்பு வலி ஆகியவை அதிகரிக்கும்.
இதை இடைநிலை நீர் கட்டி அலர்ஜி என்று அழைக்கிறார்கள்.
சிறுநீர்ப்பை மற்றும் இடுப்பில் உண்டாகும் இந்த வலி தொடக்கத்தில் சிறு அசவுகரிய உணர்வாக ஆரம்பித்து பின்பு கடுமையான வலியாக மாறும்.
இதுதான் வலி மிகுந்த சிறுநீர்ப்பை நோயின் முதன்மையான அறிகுறி ஆகும்.
இடைநிலை நீர்க்கட்டி அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீர்ப்பையின் சுவர்களில் எரிச்சல் மற்றும் வீக்கம் உண்டாகும்.
இதனால் சிறுநீர்ப்பை முழுவதுமாக நிரம்புவதற்கு முன்பாகவே சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை உண்டாகும் .
சிறுநீர்ப்பையில் ஏற்படும் இந்த இடைநிலை நீர் கட்டி அலர்ஜியானது ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது.
குறிப்பாக 30 வயதை கடந்த பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாக இருப்பதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காரணங்கள், மரபணு மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடுகள், சிறுநீர்ப்பாதையில் அடிக்கடி ஏற்படும் பாக்டீரியா தொற்று இடுப்பு பகுதியில் ஏற்படும் உள் உறுப்புகளின் செயலிழப்பு சிறுநீரகத்தில் ஏற்படும் ஒவ்வாமை நாள்பட்ட பயிற்று கோளாறுகள் மற்றும் அடிக்கடி மேற்கொள்ளப்படும்.
உடலுறவில் இடைநிலை நீர்க்கட்டி அலர்ஜி ஏற்படலாம்.
இடைநிலை நீர்க்கட்டி அலர்ஜி பிரச்சனை ஏற்பட்டால் சிறுநீர்ப்பையின் திறன் குறையும்.
சிறுநீர்ப்பையின் சுவடுகள் பலவீனமடையும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை உண்டாகும் .
உடலுறவின் போது அதிக வலி ஏற்படும்.
தூக்கம் பாதிக்கப்படும்
மன அழுத்தம் மற்றும் மனசோர்வு ஏற்படும் .
அறிகுறிகள்
அதிகப்படியான சிறுநீர் கழிதல், சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பை மற்றும் இடுப்பு பகுதியில் வலி ஏற்படுதல் போன்றவை முதன்மை அறிகுறிகள் ஆகும்.
பிரச்சனை அதிகரிக்கும் நிலையில் மாதவிடாய் நாட்களின் போதும் நீண்ட நேரம் உறை இடத்தில் உட்கார்ந்து இருக்கும்போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் மன அழுத்தத்தில் இருக்கும் போதும் , உடலுறவில் ஈடுபடும் போதும் , சிறுநீர் பாதை அல்லது வாசனை வாய் இடைவெளியில் வலி உண்டாகக்கூடும்.
இந்த அறிகுறிகள் ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப மாறுபடலாம்.
சிகிச்சை நோய் பாதிப்பின் தன்மையை பொறுத்து வாழ்வியல் மற்றும் உணவு முறையில் மாற்றம், அக்குபஞ்சர், உடற்பயிற்சி, மருந்துகள், அறுவை சிகிச்சை என இடைநிலை நீர்க்கட்டி அலர்ஜி காண சிகிச்சையை மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளலாம்.