மாதவிடாயை ஒழுங்குபடுத்தும் உணவுகள்
மன அழுத்தம், உணவு, வாழ்க்கை முறை என்று முறையற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
அதிக உதிரப்போக்கு, அந்த நாட்களில் ஏற்படும் கடுமையான வலி என்று பெண்கள் இதனால் அனுபவிக்கும் துயரங்கள் அதிகம்.
வீட்டில் இருந்தாலாவது சமாளித்து விடலாம். பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று சொல்பவர்கள் கடும் அவஸ்தையை எதிர்கொள்வார்கள்.
கடினமான உடல் உழைப்பை தர வேண்டிய வேலைகள் இருந்தாலும், பயணம் செய்தாலோ அல்லது முக்கியமான நிகழ்ச்சிகள் இருந்தாலும் இன்னும் சிரமம் .
மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதற்காக உடற்பயிற்சிகள் செய்ய பல பெண்களுக்கு நேரம் இருப்பதில்லை.
வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதும் சிரமம்.
சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இந்த உபாதையை தவிர்க்கலாம்.
சர்க்கரை உடன் ஒப்பிடும்போது வெல்லத்தில் ரசாயனங்கள் குறைவு.
அதில் நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைய உள்ளன.
இனிப்பு உணவுகளில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்துக் கொள்வது, மாதவிடாய் நேரத்து வலியை குறைக்கும்.
ஒழுக்கற்ற மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் வைட்டமின் சி நிறைந்த பழங்களை சாப்பிட்டால் அது மாதவிடாயை தூண்டிவிடும்.
பப்பாளி பழம் இந்த குணம் கொண்டது.
எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி, மாம்பழம், அன்னாசிப்பழம் போன்றவை சாப்பிடுவது இதற்கு உதவும்.
இந்த பழங்கள் ஈஸ்ட்ரோ ஜென் ஹார்மோனை தூண்டிவிட்டு மாதவிடாயை துரிதப்படுத்தும் .
தேனில் ஊறவைத்த இஞ்சி ஒரு துண்டு அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது ஹார்மோன் சுரப்பை சமநிலைப்படுத்தும்.
இது ரத்த ஓட்டத்தை சீராக்கி மாதவிடாயை முறைப்படுத்தும்.
மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சளும் இதற்கு பெரிதும் உதவுகிறது.
கருப்பையில் ரத்த ஓட்டத்தை சீராக்கும் அற்புத குணம் மஞ்சளுக்கு உண்டு.
சூடான பாலில் மஞ்சள் தூள் கலந்து அருந்தலாம் அல்லது தேனில் சிறிதளவு மஞ்சள் தூள் குலைத்து சாப்பிடலாம்.
இது மாதவிடாயை முறைப்படுத்தும் உணவாக உதவுகிறது.
மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு தரும் உணவுகளில் ஒன்று காபி, ஓட்ஸ், கஞ்சி, தயிர், முட்டை போன்றவற்றுக்கும் இந்த குணம் உண்டு.
மாதவிடாய் நேரத்தில் அதிகமாக ரத்த இழப்பு ஏற்படும் போது பலருக்கு தாங்க முடியாத அளவுக்கு வயிற்று வலி வரும்.
இரும்புச்சத்து, போலிக் அமிலம், கால்சியம் சத்து நிறைந்த பீட்ரூட் இந்த நேரத்தில் கை கொடுக்கிறது.
ஒரு டம்ளர் தண்ணீரில் அரை டீஸ்பூன் ஓமம், ஒரு டீஸ்பூன் வெல்லம் போட்டு கொதிக்க வையுங்கள்.
அதிகாலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை அருந்துங்கள்.
இது மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்துவது உடன் அந்த நேரத்து வலியையும் குறைக்கிறது.
மேலே சொன்ன எல்லாவற்றையும் தினமும் சாப்பிட வேண்டிய அவசியமில்லை.
எல்லா உணவுகளையும் சாப்பிட வேண்டும் என்றும் இல்லை.
உத்தேசமாக மாதவிடாய் வரும் நேரத்தை கணக்கிட்டு அதற்கு மூன்று நாட்கள் முன்பாக ஏதேனும் ஒன்று இரண்டை பின்பற்றினால் போதுமானது.